உன்ன பாத்தா பத்திக்கிட்டு வருது.. மாஸ் நடிகருக்கே நோ சொன்ன நடிகை.. அந்த பழக்கத்தால் நாசமான வாழ்க்கை!
சென்னை: தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இந்த நடிகை நடித்த முதல் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படத்தில் கமிட்டாகி பிஸியாக நடித்து வந்தார் அந்த ஒல்லி நடிகை. ஆனால், அவருக்கு இருந்த கெட்டப்பழக்கத்தால் சினிமாவை விட்டே காணாமல் போய்விட்டார். தற்போது, அந்த அம்மணி வருமானத்திற்காக ஓட்டலை ஒன்றை நடத்தி வருகிறார்.
80 மற்றும் 80 கால கட்டத்தில் சினிமாவில் நடிக்க வந்த அந்த காசி நடிகருக்கு ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் படவாய்ப்பு இல்லாததால், சின்ன சின்ன விளம்பரத்தில் நடித்து வந்தார். எப்படியாவது படவாய்ப்பு வரும் அதில் நடித்துவிடலாம் என காத்திருந்த அந்த நடிகருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்பு இல்லாததால், ஆந்திரா பக்கம் சென்று ஒரு சில படத்தில் நடித்தார். அதுவும் சரிபட்டு வராததால், மாலிவுட் சென்று நடித்தார். அங்கும் ஹீரோ கதாபாத்திரம் கிடைக்காததால் கடுப்பாகிப் போன அந்த நடிகர் மீண்டும் தமிழ் சினிமாவிற்கே வந்தார்.

மாஸ் நடிகரின் லீலை: அந்த காசி நடிகர், தமிழ் சினிமாவிற்கு வந்த நேரம், அறிமுக இயக்குநர் ஒருவரின் படத்தில் ஹீரோவாக நடிக்க, அதுவும் நல்ல கதாபாத்திரத்தில், வெயிட்டான ரோல் கிடைத்தது. அந்த படத்திற்கு பிறகு அந்த நடிகர், ஸ்டார் ஹீரோவாகவே மாறிவிட்டார். அடுத்தடுத்த படத்தில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார். காசி நடிகர் வளர வளர இவருக்கு மாஸ் அதிகமாக, தன்னுடன் நடித்த நடிகைகளை பண்ணை வீட்டுக்கு அழைத்து செல்வதை வாடிக்கையாக மாற்றி விட்டார். எந்த நடிகர்களும் அனுபவிக்காத, சலுகைகளை இவர் அனுபவித்து இருக்கிறார் என்று தமிழ் சினிமாவில் இவர் குறித்து அவ்வப்போது பேச்சு வரும்ங
பாத்தாலே பத்திக்கிட்டு வருது: இந்த நடிகரின் படத்தில் தான் ஒல்லி நடிகையும் ஜோடி போட்டு நடித்தார், அந்த நடிகைக்கு பல ரூட் போட்டும் அந்த ஒல்லி நடிகை எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. அந்த ஒல்லி நடிகைக்கு பிடித்து ரூமுக்கு போகலாம், பிடிக்காமல் படத்திற்காக எதையும் செய்ய மாட்டேன் என கொள்கை கொண்டவர். இப்படி தனக்கு என்று தனி பாலிசி வைத்து இருக்கும் இந்த ஒல்லி நடிகையிடம், காசி நடிகரின் பிஏ என்று, அழைத்துள்ளார். இதனால், கடுப்பான அந்த ஒல்லி நடிகை, அந்த நடிகரை பாத்தாலே பத்திக்கிட்டு வருது என்றும் பெரிய நடிகரா இருந்தா எனக்கு என்ன என்று கேட்டுள்ளார். இந்த விஷயம் தெரிந்த அந்த மாஸ் நடிகர் எவ்வளவு முயற்சி செய்தும் அது நடக்காமல் போனதால், மிகுந்த வருத்தத்துடன் அந்த படத்தை முடித்தார். ஆனால், அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று நடிகருக்கும், ஒல்லி நடிகைக்கும் அடுத்தடுத்து படவாய்ப்பு வந்தன.
அந்தபழக்கம்: முதல் படத்தின் வெற்றியால், பீக்கில் இருந்த இந்த ஒல்லி நடிகைக்கு குடி மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்ததால், படப்பிடிப்பின் போதே குடித்துவிட்டு நடிக்க ஆரம்பித்தார். இதனால், உச்சத்தில் இருந்த, ஒல்லி நடிகைக்கு படிப்படியாக படவாய்ப்பு குறைந்தது. கடைசியில் நகைச்சுவை நடிகர் ஒருவரோடு அட்ஜெஸ்ட்மென்ட் செய்து அவருடன் ஹீரோயினாக நடித்தார். ஆனால், அந்தப்படமும் பெரியதாக போகவில்லை. இப்போது இந்த நடிகை சொந்தமாக ஒரு ஓட்டலை நடத்தி வருகிறார். பாவம் எப்படியோ இருந்து இருக்க வேண்டிய நடிகை, தனது தவறான பழக்கத்தால் அவரின் சினிமா வாழ்க்கையை நாசமாகிவிட்டது.


Click it and Unblock the Notifications











