»   »  ஓவர் பிகு பண்ணும் லவ் நடிகை மீது ஒல்லி நடிகர் கோபம்

ஓவர் பிகு பண்ணும் லவ் நடிகை மீது ஒல்லி நடிகர் கோபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: லவ் நாயகி பட விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர மாட்டேன் என்று ஓவர் பிகு பண்ணுகிறாராம். இதனால் ஒல்லி நடிகர் அவர் மீது கோபத்தில் உள்ளாராம்.

சேட்டன் மாநிலத்தில் வெளியான லவ் படம் மூலம் நடிகையான அந்த சேச்சி மன்னர் பெயர் கொண்ட நடிகரின் படம் மூலம் கோலிவுட் வந்தார். மீண்டும் அதே நடிகருடன் சேர்ந்து நடித்தார்.

Olli angry with love actress

தற்போது ஒல்லி படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் விரைவில் ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள், பிரஸ் மீட்டுக்கு அழைத்தால் வர மாட்டேன் என்று பிகு பண்ணுகிறாராம்.

நடிச்சது மூன்று படம் தான் அதற்குள் இந்த பொண்ணுக்கு பந்தாவ பாரு என்று ஒல்லி படக்குழு முணுமுணுக்கிறது. இன்னும் வளரவே இல்லை அதற்குள் இத்தனை பந்தாவா என்கிறார்கள் கோடம்பாக்கத்துக்காரர்கள்.

விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுத்ததால் நடிகை மீது ஒல்லி நடிகர் கோபத்தில் உள்ளாராம்.

English summary
Buzz is that Olli actor is angry with love actress as she is not attending their upcoming movie's promotional programmes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil