»   »  முத்த நாயகன், சீனியர் நடிகை பிரியவும் ஒல்லி தான் காரணமாமே!

முத்த நாயகன், சீனியர் நடிகை பிரியவும் ஒல்லி தான் காரணமாமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்த முத்த நாயகனும், சீனியர் நடிகையும் பிரிய ஒல்லி நடிகர் காரணம் என்று கூறப்படுகிறது.

மில்க் நடிகை தனது இயக்குனர் கணவரை பிரிய ஒல்லி நடிகர் காரணம் என்று கூறப்பட்டது. அதன் பிறகு கோலிவுட்டில் எந்த ஜோடி பிரிந்தாலும் அதற்கு ஒல்லி காரணம் என்ற பேச்சு கிளம்புகிறது. மகா பிரபு இங்கேயும் வந்துட்டீங்களா என்று நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு கமெண்ட் போடுகிறார்கள்.

ஸ்டைல் நடிகரின் இளைய மகள் கணவரை பிரிந்து வாழவும் ஒல்லியே காரணம் என்று பேசப்பட்டது. இந்நிலையில் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்த முத்த நாயகனும், சீனியர் நடிகையும் பிரிய ஒல்லி நடிகர் காரணம் என்று கூறப்படுகிறது.

ஒல்லி இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள படத்தில் தனது மகளை ஹீரோயினாக்க விரும்பினாராம் சீனியர் நடிகை. ஆனால் அது முத்த நாயகனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

இங்கிருந்தால் தனது மகளை அவரின் விருப்பம் போன்று நடிகையாக்க முடியாது என்று சீனியர் நடிகை முத்த நாயகனை பிரிந்து வந்துவிட்டாராம். மகளை ஹீரோயினாக்க சீனியர் நடிகை ஒல்லியிடம் பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தியும் முத்த நாயகனால் அது வீணாகிப் போய்விட்டதாம்.

English summary
Buzz is that olli is the reason for senior actress parting her ways with her live-in partner Kissing King.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil