»   »  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த ஒல்லி

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த ஒல்லி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: படம் ரிலீஸாகும் நேரத்தில் ஒல்லி நடிகர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார்.

பாடகி ஒருவர் பிரச்சனையை கிளப்பிய பிறகு ஒல்லி நடிகரின் பெயர் ஏகத்திற்கும் டேமேஜாகிவிட்டது. பத்தாக்குறைக்கு மில்க் நடிகையுடனான தொடர்பு குறித்த பேச்சு வேறு.

Olli hits the bull's eye

நடிகையுடனான கள்ளத்தொடர்பு காரணமாக ஒல்லிக்கும், மனைவிக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்பட்டது. அது உண்மை என்பது போல ஒல்லியின் புதுப்பட விழாக்களில் மனைவி கலந்து கொள்ளவில்லை.

பட விழாக்களில் யார், யாருக்கோ நன்றி தெரிவித்த ஒல்லி தனது மனைவியின் பெயரை மறந்தும்கூட கூறவில்லை. படம் ரிலீஸாகும் நேரத்தில் தனது அவப்பெயர் மற்றும் மனைவியுடனான பிரச்சனை பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஒல்லி.

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்து நல்ல பெயர் எடுத்துள்ளார். நிதியுதவி அளித்த நிகழ்ச்சிக்கு தனது மனைவியை உடன் அழைத்துச் சென்று குடும்ப பிரச்சனை பேச்சுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

ஒல்லி, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பேச்சாகக் கிடக்கிறது.

English summary
Olli has done a good deed which is really really sweet of him. But people think he has done with hidden agenda.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil