»   »  மகிழ்ச்சி நடிகரை காதலிக்கும் ஒல்லி பட ஹீரோயின்?

மகிழ்ச்சி நடிகரை காதலிக்கும் ஒல்லி பட ஹீரோயின்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஒல்லி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்த சேச்சி நடிகை தெலுங்கு நடிகர் ஒருவரை காதலிப்பதாக பேச்சாகக் கிடக்கிறது.

காதலுக்கு மறுபெயர் கொண்ட மலையாள படம் மூலம் நடிகையானவர் அந்த சேச்சி. அதன் பிறகு ஒல்லி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார். அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருந்தார்.

இந்நிலையில் அவர் பெயரில் மகிழ்ச்சியை வைத்திருக்கும் தெலுங்கு நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்த ஆசீர்வாதம் படம் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. மகிழ்ச்சி நடிகர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை மகிழ்ச்சி நடிகருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி நடிகருடன் இருக்கும் புகைப்படங்கள் தான்.

இதை பார்ப்பவர்கள் நடிகைக்கும், நடிகருக்கும் இடையே காதல் என்று பேசிக் கொள்கிறார்கள். நடிகர் பெரிய வீட்டு பெண் ஒருவர காதலிப்பதாக முன்பு கூறப்பட்டது.

English summary
Buzz is that Olli movie heroine is in love with a young hero who is popular in Tollywood and Kollywood.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil