»   »  திமிர் பிடித்தவர் என்று பெயர் எடுத்த ஒல்லி ஹீரோயின்: சம்பளத்தை உயர்த்திட்டாராம்!

திமிர் பிடித்தவர் என்று பெயர் எடுத்த ஒல்லி ஹீரோயின்: சம்பளத்தை உயர்த்திட்டாராம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சரியான திமிர் பிடிச்சது என்று பெயர் எடுத்துள்ள நடிகை சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம்.

லவ் படம் மூலம் நடிகையான கேரளாவை சேர்ந்தவர் தமிழ் திரையுலகிற்கு வந்தார். வெற்றியை தலைக்கு ஏற்றிக் கொள்ளாத நடிகரின் படத்தில் நடித்தார்.

அதன் பிறகு மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு மீண்டும் அதே தமிழ் ஹீரோவுடன் ஜோடி சேர்ந்தார்.

படம்

படம்

நடிகையும், வெற்றியை தலைக்கு ஏற்றிக் கொள்ளாத நடிகரும் நடித்த படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தில் நடிகையின் நடிப்பும் பாராட்டு பெற்றது.

சம்பளம்

சம்பளம்

அந்த படத்தை அடுத்து நடிகை ஒல்லியுடன் சேர்ந்து நடித்த படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதை பார்த்த நடிகைக்கு சம்பளத்தை உயர்த்தும் எண்ணம் வந்துள்ளது.

ஒல்லி ஹீரோயின்

ஒல்லி ஹீரோயின்

அந்த அம்மா தமிழில் மொத்தம் மூன்று படங்களில் நடித்துள்ளார். அதில் இரண்டு படங்கள் ஒரே ஹீரோவுடன் மற்றொன்று ஒல்லியுடன். இந்நிலையில் நான் முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக்கும் என்று கூறி சம்பளத்தை உயர்த்திவிட்டாராம்.

திமிர்

திமிர்

படப்பிடிப்புக்கு வந்தால் யாருடனும் பேச மாட்டாராம் நடிகை. அவரது நடிவடிக்கைகளால் திமிர் பிடித்தவர் என்று பெயர் வாங்கியுள்ளார். இந்நிலையில் சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

English summary
Olli's heroine has reportedly increased her remuneration. She has got the name as headweight actress.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil