»   »  கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக போச்சு 'சித்தி'யின் ஆபிஸில் நடந்த ஐடி ரெய்டு

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக போச்சு 'சித்தி'யின் ஆபிஸில் நடந்த ஐடி ரெய்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக சித்தியின் அலுவலகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் வரி ஏய்ப்பு குறித்த ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

அமைச்சரிடம் தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது.

நாட்டாமை

நாட்டாமை

நாட்டாமையின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். என்னிடம் எதுவும் இல்லை நீங்கள் தான் எதையாவது கொடுக்க வேண்டும் என்றார் நாட்டாமை.

பணம்

பணம்

இடைத்தேர்தலில் ஆளும்கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார் நாட்டாமை. ஆளும்கட்சியின் முக்கியப் புள்ளியிடம் பல கோடி ரூபாய் பெற்றுக் கொண்டே நாட்டாமை ஆதரவு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

அலுவலகம்

அலுவலகம்

வருமான வரித்துறையினர் நாட்டாமையின் வீட்டை அடுத்து அவரது நடிகை மனைவி நடத்தும் அலுவலகத்தில் சோதனை நடத்தினார்கள். இதையடுத்து நடிகையும் விசாரணைக்காக வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

ஆவணங்கள்

ஆவணங்கள்

வருமான வரித்துறையினர் அரசியல் தொடர்பான பண பரிமாற்றம் குறித்து ஏதாவது சிக்குமா என்று எதிர்பார்த்து அலுவலகம் சென்ற இடத்தில் நடிகை ரூ. 4 கோடி வரி ஏய்ப்பு செய்த ஆவணங்கள் சிக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

English summary
According to reports, IT officials have confiscted documents showing that a senior actress's tax evasion of Rs. 4 crore.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil