மீண்டும் அப்பா உதவியை நாடும் வாரிசு நடிகர்.. இந்த வாட்டியாவது லக் அடிக்குமா?

சென்னை: அப்பா நடிகரின் உதவியால் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த அந்த வாரிசு நடிகர் படத்திற்கு ஆரம்பம் முதலே ஏற்பட்ட சொதப்பல் கடைசி வரை நீடித்தது.

மற்ற மொழிகளில் ஹிட்டான அந்த ரீமேக் படம் இங்கே மட்டும் படு தோல்வியை சந்திக்க பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இந்நிலையில், அந்த வாரிசு நடிகருக்கு அடுத்த பட வாய்ப்புகள் அமையாவில்லையாம். அதனால், மறுபடியும் அப்பா நடிக்கும் படத்திலேயே சான்ஸ் கேட்டு வருகிறாராம் அந்த வாரிசு நடிகர்.

அப்பாவின் நிழல்

அப்பாவின் நிழல்

அந்த திறமையான நடிகரின் மகனுக்கும் திறமைகள் இருந்தாலும், அப்பாவின் நிழலிலே சுற்றி வருவது கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. சினிமாவை பொறுத்தமட்டில் சொந்தமாக முயற்சி செய்து முன்னுக்கு வருவதையே ரசிகர்கள் எதிர்பார்ப்பதாக தெரிகிறது.

மீம் கலாய்

மீம் கலாய்

அண்மையில் வெளியான அந்த தெலுங்கு நடிகரின் உலக படத்தின் டீசர் வந்ததில் இருந்து, இந்த வாரிசு நடிகரை வைத்து பல ட்ரோல் வீடியோக்கள் மீம்கள் வெளியாகி வருகின்றன. அதிலும், அந்த மாமாவை தேடும் மீம் எல்லாம் மரண கலாய்.

முதல் கோணல்

முதல் கோணல்

மாமா இயக்குநரை வைத்து அந்த வாரிசு நடிகர் எடுத்த படம் சரியில்லை என்று மீண்டும் எடுக்கத் தொடங்கியதில் இருந்தே முதல் கோணல் முற்றிலும் கோணலாக, படம் வெளியான பிறகு படு தோல்வியை சந்தித்து அந்த வாரிசு நடிகருக்கு எல்லாமே சொதப்பலாக அமைந்தது.

நல்ல நடிகர்

நல்ல நடிகர்

அப்பா நடிகரின் சாயலை அப்படியே உரித்து வைத்து இருப்பது போல, அவரது நடிப்பும் வாரிசு நடிகருக்கு இயற்கையாகவே இருக்கிறது. முதல் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், நல்ல நடிகர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.

ஹீரோயின் சரியில்லை

ஹீரோயின் சரியில்லை

வாரிசு நடிகரின் முதல் படத்தின் தோல்விக்கு காரணமாக அந்த ஹீரோயின் சரியில்லை அதனால் தான் படம் ஓடவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்து வருகிறது.

வாய்ப்பு கிடைக்கலை

வாய்ப்பு கிடைக்கலை

முதல் படமே தோல்வியை சந்தித்ததால் அடுத்த அடுத்த படங்களுக்கான வாய்ப்புகள் அந்த வாரிசு நடிகரை தேடி வரவில்லை.

கடும் அப்செட்

கடும் அப்செட்

இதனால், அந்த வாரிசு நடிகர் கடும் அப்செட்டில் இருக்கிறார். எனக்கு மட்டும் ஏன்பா இப்படியெல்லாம் நடக்குதுன்னு அப்பா மடியில் படுத்துக் கொண்டு அழுது புலம்பி வருகிறாராம்.

மீண்டும் வாய்ப்பு தேடும் அப்பா

மீண்டும் வாய்ப்பு தேடும் அப்பா

மகனின் அழுகை காண சகிக்காமல், தான் அடுத்து நடிக்கவுள்ள புதிய படம் ஒன்றில், தன்னுடைய மகனையும் நடிக்க வைக்க திரைக்கதையில் சற்று மாறுதல்களை ஏற்படுத்தி தருமாறு மகனுக்காக மீண்டும் வாய்ப்பு தேடி அலைந்து வருகிறாராம் பாசமான அப்பா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X