ஏற்கனவே அவர் காத்திருக்க.. நடன நடிகர் மீது இவருக்கும் ஒன் சைட் லவ்வாம்.. இதான் கோலிவுட்ல இப்ப ஹாட்!
சென்னை: நடன நடிகருக்காக ஏற்கனவே அம்மாஞ்சி நடிகை காதலில் காத்திருக்க, மேலும் ஒரு நடிகைக்கு அவர் மீது ஒன் சைட் லவ் என தகவல் பரவி வருகிறது.
நடன சூறாவளியான அந்த நடிகர் நடனம் மட்டுமின்றி இயக்கம், நடிப்பு என ரவுண்டு கட்டி வருகிறார். ஆல்ரவுண்டரான என அந்த நடிகர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகையின் மீது கொண்ட காதலால் கட்டிய காதல் மனைவியை விவாகரத்து செய்தார்.
பின்னர் உச்ச நடிகையை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற தகவல் பரவியது. இருவரும் எல்லா விழாக்களிலும் ஜோடியாகவே பங்கேற்றனர்.

விரல் நடிகருடன் காதல்
பல ஆண்டுகளாக பேசப்பட்டது இவர்களின் காதல். நடிகைக்கும் முதல் காதல் அல்ல. ஏற்கனவே விரல் நடிகருடன் காதல் கொண்டு இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்தார்.

மானம் மரியாதை போய்
ஆனால் அந்த காதல் பாதியில் முறிய விரல் நடிகருடன் நெருக்கமாக இருந்த போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இதனால் மானம் மரியாதை போய் கூனி குறுகினார் நடிகை.

கடனை அடைத்தார்
இதனால் சில நாட்கள் வெளியே தலை காட்டாமல் இருந்த நடிகை, பின்னர்தான் சூறாவளி நடிகரின் வலையில் விழுந்தார். காதலில் விழுந்த கையோடு நடிகருக்கு இருந்த பல கோடி ரூபாய் கடனை அடைத்து நிம்மதி பெற்றுக்கொடுத்தார் நடிகை.

கழட்டிவிட்டார்
ஆனால் காரியம் ஆனவுடன் நடிகையை கழட்டி விட்டுவிட்டு வட நாட்டில் செட்டில் ஆனார் சூறாவளி. அங்கும் ஒரு நடிகையுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார்.

இருவருமே நெருக்கம்
இந்நிலையில் தென்னிந்திய நடிகைகள் இருவர் நடிகரை ஒரு தலையாக காதலித்து வருகிறார்களாம். இரு நடிககைகளுமே அவருடன் இணைந்து பணியாற்றியவர்கள்தான்.

டீச்சர் நடிகை
பணி புரியும் போதே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் அம்மாஞ்சி நடிகை குறித்த தகவல் அரசல்புரசலாக வெளியான நிலையில் தற்போது டீச்சர் நடிகையின் ஒரு தலைக்காதல் குறித்தும் பேசப்பட்டு வருகிறார்.

சுற்றி சுற்றி வருகிறாராம்
மலையாளதேசத்தை பூர்விகமாக கொண்ட அந்த நடிகை, நடிகரையே சுற்றி சுற்றி வருகிறாராம். ஏற்கனவே ஒருவர் வாரத்திற்கு ஒரு முறையாவது அவரை பார்த்துவிட வேண்டும் என பறந்து கொண்டிருக்கு இந்த நடிகையும் நடிகரை தேடி தேடி செல்கிறாராம்.

எதிர்பார்க்கலாம்
எப்படியாவது நடன நடிகரை வலைத்துவிட வேண்டும் என்பதில் இருவரும் குறியாக உள்ளனராம். இதனைக்கேட்ட கோலிவுட்காரர்கள், அப்போது விரைவில் சக்களத்தி சண்டையை எதிர்பார்க்கலாம் போல என கிசுகிசுக்கின்றனர்.

நெருக்கமாக இருந்தாலும்..
ஆனால் நடிகரோ நடிகைகளிடம் நெருக்கமாக பழகினாலும் எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் உள்ளாராம். இத்தனை வயதிலும் இளம் நடிகைகளை வளைக்கும் நடிகரின் டெக்னிக்கை கண்டு வயிற்றெரிச்சலில் இருக்கிறார்களாம் இளம் நடிகர்கள்.


Click it and Unblock the Notifications











