ஒல்லியை நம்பி மோசம் போன இயக்குநர்!
ஒல்லி நடிகரை வைத்து அடுத்த படம் இயக்கப்போவதாக குறும்படத்தில் இருந்து பெரிய படம் இயக்க வந்த இயக்குநர் அறிவித்தார். அது ட்ராப் ஆகிவிட்டதாம்.
இயக்குநர் இயக்கி கடைசியாக வெளிவந்த படம் சரியாக போகவில்லை. இதனால் இயக்குநர் கேட்ட பட்ஜெட்டை போட்டுப் படமெடுக்க யோசிக்கிறாராம் ஒல்லி நடிகர். அமெரிக்காவில் நடக்கும் கதை என்பதால் பட்ஜெட் 50 சியைத் தாண்டுகிறதாம்.

வெளியில் தயாரிப்பாளர் கிடைப்பது சிரமம் என்றுதான் தானே தயாரிப்பதாக வாக்கு தந்திருந்தார் நடிகர். இப்போது நடிகர் கைவிரித்து விட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறாராம் இயக்குநர்.
ஒல்லியால் பாதிக்கப்பட்ட இயக்குநர்கள் தனி சங்கமே ஆரம்பித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
Comments


Click it and Unblock the Notifications