ஹெவி அமவுண்ட்.. அந்த நபருக்கு மாசம் இத்தனை லட்சம் பறக்குதா?.. அதனால தான் இரவு பகலா வெளுக்குறாரா?
சென்னை: மாஸ் நடிகரின் படம் வந்தால் உடனடியாக வன்ம குடோனாக மாற எதிர் தரப்பில் இருந்து ஹெவி அமவுண்ட் அந்த டிராக்கருக்கு செல்வதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.

நடிகர்கள் சமீப காலமாக ஐடி விங்கை ஆரம்பித்து பல லட்சம் ரூபாயை அதற்கு செலவு செய்து தங்களுக்கான மாஸ் பில்டப்புகளை மட்டுமின்றி போட்டி நடிகர்களை பொட்டலம் கட்டும் அளவுக்கு கீழே இறங்கி வேலை செய்து வருவதாக கூறுகின்றனர்.
இதில், தர லோக்கலாக இறங்கி படு மோசமாக இரவு பகலாக ஓவர் டியூட்டி செய்து வரும் அந்த நபருக்கு மட்டும் செல்வதால் தான் இதையே பொழப்பாக கொண்டு திரிகிறார் என்கின்றனர்.
நெகட்டிவ் பப்ளிசிட்டி: சோஷியல் மீடியா உலகத்தில் பாசிட்டிவ் கருத்துக்களை ஓபனாக செய்யும் பல பிரபலங்களும் மறைமுகமாக நெகட்டிவ் பப்ளிசிட்டி வேலைகளுக்கு அதிக பணத்தை அள்ளி வீசி வருவதாக கூறுகின்றனர். ஒரே கருத்தை பலரும் காப்பி பேஸ்ட் செய்து போட்டு ஒரு குறிப்பிட்ட நடிகரை காலி செய்ய வேண்டும் என்றாலும், காப்பாற்ற வேண்டுமென்றாலும் இந்த ஆன்லைன் டிராக்கர்கள் அதிரடியாக களமிறங்கி டே நைட் பார்க்காமல் வேலை பார்த்து வருகின்றனர்.
ஹெவி அமவுண்ட்: சமீபத்தில் வெளியான மாஸ் நடிகரின் படத்தை காலி செய்ய வேண்டும் என்பதற்காக சில குறிப்பிட்ட டிராக்கர்களுக்கு ஹெவி அமவுண்ட்டை எதிர் தரப்பு கொடுத்திருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன. அதன் காரணமாகத்தான் ஏகப்பட்ட நெகட்டிவ் போஸ்ட்டுகள் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதாக கூறுகின்றனர்.
ரசிகர்கள் பலி கடா: ஆன்லைன் மாஃபியா மூலம் நடைபெறும் இந்த சண்டையில் சாதாரண ரசிகர்கள் பலி கடா ஆக்கப்பட்டு வருவதாகவும், இவர்கள் தூண்டிவிட அவர்கள் துப்பாக்கியில் இருந்து தெறிக்கும் தோட்டாக்களாக எந்தவொரு வருவாய் பிரயோஜனமும் இன்றி தங்கள் நேரத்தை வீணடித்து தங்கள் நடிகருக்கு காவலாக நிற்க சண்டை போட்டு வருவதாகவும், இதை வைத்து பெரிய லெவல் மார்க்கெட்டிங் மற்றும் பிசினஸ் நடைபெற்று வருவதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











