»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

கிரணின் பணத்தாசையைக் கண்டு அலறுகின்றனர் தயாரிப்பாளர்கள்.

இதுவரை ரூ. 20 லட்சம் வாங்கி வந்தவர் தடாலடியாக அதை ரூ. 30 லட்சமாக உயர்த்திவிட்டாராம். அரசுபடத்துக்குப் பின் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட கட்டணத்தை ரூ. 5 லட்சமாக்கிவிட்டார்.

இது தவிர கால்ஷீட் இருக்கிறதா, சொன்ன தேதியில் நடிக்க வர முடியுமா என்பதை எல்லாம் பார்க்காமல் யார்போனாலும் அட்வான்ஸை வாங்கிக் கொண்டு கேட்கும் தேதியைத் தருகிறாராம். ஆனால், சூட்டிங் ஸ்பாட்டுக்குவருவதில்லை. கேட்டால் உடல் நலமில்லை என்று வீட்டில் பதில் தரப்படுகிறதாம். ஆனால் அதே நேரத்தில் வேறுஏதாவது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

இந்த அனுபவம் பல தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டுவிட்டதால் கிரணின் பெயரைச் சொன்னாலே எரிச்சலடையஆரம்பித்துள்ளனர்.

இதனால் அவரை சூட்டிங் ஸ்பாட்டுக்கு இழுத்து வர ஒரு ஆளை காலையிலேயே அவரது இருப்பிடத்துக்குஅனுப்பி வைக்க ஆரம்பித்துள்ளனர் இவரிடம் மாட்டிக் கொண்ட தயாரிப்பாளர்கள்.

கட்டாயம் இன்று சூட்டிங்குக்கு வந்து தான் ஆக வேண்டும் மிகவும் நெருக்கினால், கூடுதலாகத் தொகைகேட்கிறாராம். மண்டையைப் பிய்த்துக் கொண்டு அலைகின்றனர் தயாரிப்பு நிர்வாகிகள்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil