பிரைட் நடிகர் தான் ஒரே சரணாலயம்.. சுத்துப்போடும் அவுட்டேட்டட் இயக்குநர்கள்.. சிக்கினா சோலி முடிஞ்சு!

By Staff

சென்னை: மாஸ் நடிகர் வேற பக்கம் சென்ற நிலையில், டாப் நடிகரையும் அதிகளவு டார்ச்சர் செய்து பெரிய பட்ஜெட் படங்களை உருவாக்க முடியாது என்கிற நிலை உருவாகியுள்ள நிலையில், பிரைட் நடிகர் மட்டுமே சரணாலயம் என சில அவுட்டேட் இயக்குநர்கள் முடிவு செய்து அவரை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருவதாக பேச்சுக்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவுக்கு ஸ்ட்ராங்கான ஹீரோக்கள் உருவாக வேண்டும் என்றும் அது நடந்தால் மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் முன்பை போல கொடி நாட்ட முடியும் என்றும் கூறுகின்றனர். இல்லையென்றால், இருக்கும் தியேட்டர்களையும் இழுத்து மூடும் நிலை தான் உருவாகும் என்கின்றனர்.

Outdated DIrectors waiting for Bright Actor call sheet He is the only hope to them
Photo Credit:

பிரைட் நடிகரும் தான் விட்ட இடத்தை மீண்டும் எப்படியாவது பிடிக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வரும் நிலையில், சீனியர் நண்பர்களான இயக்குநர்களை பகைத்துக் கொள்ளவும் மனமில்லாமல் அவர்களுக்கு நோ சொல்ல முடியாமல் காலத்தைக் கடத்தி வருகிறார் என்கின்றனர்.

கடவுள் பெயர் கொண்ட இயக்குநர்கள்: ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் கொடுத்த கடவுள் பெயர் கொண்ட இயக்குநர்கள் சிலர் தற்போது எப்படியாவது பிரைட் நடிகரை பிடித்து ஒரு படத்தைக் கொடுத்து கம்பேக் கொடுத்து விட வேண்டும் என்கிற முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் என பேச்சுக்கள் கசிந்துள்ளன. ஆனால், பிரைட் நடிகர் இந்த இயக்குநர்கள் வசம் சென்று சிக்கிக் கொண்டால் சோலி முடிந்துவிடுமே என்கிற பயத்தில் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதை தொடர்ந்து தள்ளிப்போட்டு வருவதாக கூறுகின்றனர்.

Outdated DIrectors waiting for Bright Actor call sheet He is the only hope to them
Photo Credit:

ரீ ரிலீஸ் ஸ்டண்ட்: அதில், ஒரு இயக்குநர் அவுட்டேட்டட் இயக்குநர்களின் உச்சமாகவே மாறிவிட்டார். பக்கத்து ஸ்டேட்டுக்கு தாவிய நிலையில், அங்கேயும் ஒரு வெற்றி கூட பெற முடியாத சூழலில் மீண்டும் பழைய படங்களை எல்லாம் பட்டி டிக்கெரிங் பார்த்து வெளியிட்டு ரீ ரிலீஸ் ஸ்டண்ட் செய்து எப்படியாவது பிரைட் நடிகரை கவுத்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறாராம்.

Outdated DIrectors waiting for Bright Actor call sheet He is the only hope to them
Photo Credit:

அமைதியான மனைவி: நடிகரை டெமி காட் ஆக்கிவிட வேண்டும் என ஓவர் ஆட்டம் போட்ட மனைவியின் இன்வால்வ்மென்ட் தான் நடிகரின் வீழ்ச்சிக்கு காரணம் என நெருங்கிய நண்பர் ஒருவர் நேரடியாகவே சொன்ன நிலையில், மனைவி நடிகரின் எந்தவொரு வேலையிலும் தலையிடாமல் அமைதியாகி விட்டாராம். அதன் காரணமாக இயக்குநர் நடிகரின் மனைவியிடம் வைத்த கோரிக்கையும் தற்போது வரை கை கொடுக்காத நிலையில், உள்ளது என்கின்றனர்.

காத்திருக்கும் பிரமாண்டம்: அந்த இயக்குநரை தொடர்ந்து பிரமாண்டமும் நடிகரின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறாராம். வேறு எந்த நபரை வைத்து எடுத்தாலும், ஓரளவுக்கு கூட வெற்றி என்பதை பார்க்க முடியாது என்றும் உடல் உழைப்பைக் கொட்டக் கூடிய நடிகர் இவர் மட்டும் தான் என்பதால் வெயிட் பண்ணிக் கொண்டு இருக்கிறாராம். அந்த இயக்குநர்களுக்கு பிரைட் நடிகர் ஒன் லாஸ்ட் சான்ஸ் தருவாரா என்பதை காத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X