காமெடி நடிகருக்கு ஓவர் கடனாம்ப்பா.. அதுக்குத்தான் இந்த திடீர் யூடர்னா?.. எல்லாத்துக்கும் காரணம்?
சென்னை: அந்த பெரிய டிவியில் இருந்து வந்து சினிமாவில் பெரிதாக பல பிரபலங்கள் சாதித்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் சினிமாவில் எட்டிப் பார்த்துவிட்டு நமக்கு இதெல்லாம் செட்டாகாது என மீண்டும் அந்த டிவியிலேயே ஒட்டிக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். காமெடி நடிகராக அறிமுகமான அந்த பிரபலம் ஒரு கட்டத்தில் ஹீரோவாக வேண்டும் என முடிவெடுக்க காரணமே அதே டிவியில் இருந்து வந்த ஒருவர் ஹீரோவாக மாறியது தான் என்கின்றனர்.
காமெடி நடிகர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் நாமும் ஹீரோவாக நடிக்கலாம் என்கிற ஆசையில் சினிமாவுக்குள் திடீரென விஸ்வரூபம் எடுப்பதை அந்த காலத்தில் இருந்தே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு அப்டேட்டாவது எந்தவிதத்திலும் தவறான முடிவு கிடையாது. அப்படி அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டியது கட்டாயமாகக் கூட இருக்கிறது.

அப்படியொரு முடிவை எடுத்து கடந்த சில ஆண்டுகளாக முட்டி மோதி பார்த்தும் பெரிதாக சம்பாதிக்க முடியாமல் கடனில் தத்தளித்து தவித்து வருகிறாராம் அந்த பிரபல காமெடி நடிகர் என திடுக்கிட வைக்கும் தகவல்கள் காத்துவாக்குல கசிந்துள்ளன.
பிழைக்கத் தெரியாத பிள்ளை: சினிமாவில் சின்ன கேரக்டரில் நடித்து வரும் சில நடிகர்களே பல கோடி சொத்துக்கு சொந்தக்காரர்களாக பல இடங்களில் முதலீடு செய்து லாபத்தை அள்ளி வருகின்றனர். ஆனால், ஒரு சிலர், முன்னணி நடிகராக வலம் வந்தாலும் பிழைக்கத் தெரியாத பிள்ளையை போல தேவையற்ற விஷயத்தில் பணத்தை வீணடித்து கடன் சுமையில் சிக்கிக் கொள்கின்றனர். அந்த காமெடி நடிகரும் அப்படி சிக்கிக் கொண்டதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.
படத்தயாரிப்பால் பலத்த அடி: காமெடி நடிகராக இருந்த வரை பலரும் நடிகரின் கால்ஷீட் கேட்டு தவமாய் தவமிருந்தனர். ஆனால், ஹீரோவான பின்னர், தான் சம்பாதித்து வைத்திருந்த பணத்தை எல்லாம் செலவு செய்து சொந்த காசுல படம் பண்ணலாம் என அந்த நடிகர் அகல கால் வைத்தது தான் அவருக்கு பெரிய சிக்கலை உருவாக்கியது என்றும் அந்த இங்கிலிஷ் இயக்குநருக்கு ஏற்பட்ட அதே நெருக்கடியில் தான் காமெடி நடிகரும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.
கடனை அடைக்க யூடர்ன்: நடிகருக்கு கழுத்துக்கு மேலே கடன் சென்ற நிலையில் தான் தற்போது இனிமே பழையபடிக்கு மாறுகிறேன் என தனது நண்பர்களின் தயவால் மீண்டும் யூடர்ன் அடித்துள்ளார் என்கின்றனர். கூடிய சீக்கிரமே நடிகர் தன்னுடைய பிரச்சனைகளில் இருந்து மீண்டு மீண்டும் பழையபடிக்கு உயர வேண்டும் என அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











