இந்த 'சீச்சீ' டைட்டிலில் நடிக்கலாமா? இப்போது யோசிக்கும் சித்திர நடிகை!

பெரிய முதலாளி நிகழ்ச்சிக்கு பிறகு சித்திர நடிகைக்கு நல்ல இமேஜ் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதை கெடுக்கும் விதமாக அவர் நடிக்கவிருக்கும் ஒரு படத்துக்கு இருட்டறையில் முரட்டு குத்து என்று பெயர் வைத்திருக்கிறார். அதில் நடிக்கலாமா வேண்டாமா என்று யோசனையில் இருக்கிறாராம்.

நடிகைக்கு திடீர் இமேஜ் ஏற்பட்டதால் அவர் நடித்து கிடப்பில் கிடந்த படங்களுக்கு நல்ல மவுசு ஏற்பட்டிருக்கிறது. அவர் ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கும் படங்கள் கூட அவரது பெயரிலேயே வெளியாகிறது.

அதையெல்லாம் கூட நடிகை கண்டுகொள்ளவில்லை. ஆனால் பெரிய தயாரிப்பாளர் ஒருவர் தயாரிப்பில் நடிக்க ஒப்புக்கொண்ட படத்துக்கு இப்போது இப்படி ஒரு பலான பெயரை அறிவித்துள்ளனர்.

இது நடிகையின் ரசிகர்களை எரிச்சலடைய வைத்திருக்கிறது. இதில் நடிக்க வேண்டாம் என்று நடிகையை அவரது ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். எனவே நடிக்கலாமா வேண்டாமா என்று யோசிக்கிறாராம் நடிகை.

தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் பஞ்சாயத்து நடக்குமோ என்ற பயமும் இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X