»   »  ஓவர் பார்ட்டி... ஓவியத்தை பார்த்து கவலைப்படும் சக கலைஞர்கள்!

ஓவர் பார்ட்டி... ஓவியத்தை பார்த்து கவலைப்படும் சக கலைஞர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திடீரென்று புகழின் உச்சிக்கு சென்றால் இதெல்லாம் சகஜம்தான்... ஆனால் அந்த நடிகை கொஞ்சம் ஓவராத்தான் போறார். அது அவருக்கு நல்லதில்லை என்று கவலைப்படுகிறார்கள் சினிமாக்காரர்கள்.

பெரிய முதலாளி நிகழ்ச்சி மூலம் மிக உயரத்துக்கு சென்றுவிட்டார் அந்த நடிகை. டாப் ரேஞ்சில் இருப்பவர் தினமும் பார்ட்டிகளுக்கு சென்றுவிடுகிறாராம்.

Painting actress's overdoss partying

இடையில் நடிகை படங்கள் இல்லாமல் சும்மா இருந்தபோதும் நடிகையின் அம்மாவுக்கு சீரியஸான நிலையில் ட்ரீட்மெண்டில் இருந்தபோதும் சினிமாவில் இருந்து ஒருவரும் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் இப்போது எல்லோரும் நடிகையை அணுகுவதோடு பார்ட்டிகளுக்கு கூட்டியும் செல்கிறார்கள். நடிகையும் பழசையெல்லாம் மறந்துவிட்டு கொண்டாடி தீர்க்கிறார்.

இந்த புகழ் நிரந்தரம் இல்லை... நல்ல படங்களில் நடித்தால்தான் கேரியரை உயர்த்த முடியும். இதை நடிகை உணர்வாரா? என்று கேட்கிறார்கள் அவர் நலன் விரும்பிகள்.

Read more about: gossip கிசுகிசு
English summary
The well wishers of bigboss celebrity actress is attending parties regularly and co stars worried about her future.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X