தங்கம் விக்கிற விலையில் இப்படியா?.. நடிகர் வீட்டிலிருந்து நடிகைக்கு வரதட்சணை டார்ச்சர் ஸ்டார்ட்?

By Staff

சென்னை: இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகையாக விளங்கிக்கொண்டிருக்கிறார் அவர். அவரும், நடிகர் ஒருவரும் தீவிரமாக காதலித்துவருகிறார்கள். இரண்டு பேரின் காதலுக்கும் முதலில் நடிகரின் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை. ஆனால் ஒற்றை காலில் நின்று சம்மதத்தை வாங்கிவிட்டார் நடிகர். திருமண ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக தொடங்கியிருக்கும் நிலையில் நடிகர் வீட்டிலிருந்து கண்டிஷன்ஸை அடுக்கடுக்காக வைத்துக்கொண்டே போகிறார்களாம்.

அண்டை மாநிலத்தை சேர்ந்த நடிகை சுந்தர திரைத்துறையில் நுழைந்து ஃபேமஸ் ஆனவர். அங்கு முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த அவர்; இங்கேயும் சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் நம் மொழி திரைத்துறை பெரிதாக அம்மணிக்கு கை கொடுக்கவில்லை. இதனால் கோலிவுட்டின் மீதான கவனத்தை மூட்டை கட்டி விட்டு மற்ற மொழி திரைத்துறைகளில் கவனம் செலுத்தி அசுர வளர்ச்சியடைந்திருக்கிறார்.

இந்திய அளவில் பிரபலம்: தென்னிந்திய மொழிகளில் மட்டும் பிரபலமாக இருந்த ஹீரோயின் இப்போது பான் இந்தியா ஹீரோயினாக மாறியிருக்கிறார். பாலிவுட்டிலும் டாப் ஹீரோக்களுக்கு ஜோடி சேர்ந்து நடித்து அந்த மொழி ரசிகர்களையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்திருக்கிறார். அம்மணிக்கு தொடர்ந்து படங்கள் ஹிட்டடிப்பதால் தனது சம்பளத்தையும் எக்குத்தப்பாக ஏற்றிவிட்டார் என்று பேசப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Pan-India Actress Faces Dowry Demands Ahead of Wedding Shocking Buzz

நடிகருடன் காதல்: இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அவரது பெர்சனல் வாழ்க்கையும் ஹெட்லைன்ஸாக மாறியிருக்கிறது. அதாவது ஆரம்பத்தில் ஒருவரை காதலித்த அவர்; அவரிடமிருந்து விலகினார். சினிமாவில் வளர ஆரம்பித்ததும் இன்னொரு நடிகரை காதலிக்க செய்தார். இரண்டு பேரும் ஒரே வீட்டில் எல்லாம் தங்கினார்கள். அடிக்கடி வெளிநாட்டுக்கு டூர் சென்றும் வந்தார்கள். தொடர்ந்து டேட்டிங் செய்த அவர்கள் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள்.

வீட்டார் போட்ட முட்டுக்கட்டை: ஆனால் நடிகரின் வீட்டில் இந்தக் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லையாம். ஆனால் நடிகரோ ஒற்றை காலில் பிடிவாதமாக நின்று திருமணத்துக்கு க்ரீன் சிக்னல் வாங்கிவிட்டார். அநேகமாக இன்னும் சில மாதங்களில் இந்த நட்சத்திர ஜோடியின் திருமணம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் திருமணத்துக்கு பிறகு நடிகை நடிக்கக்கூடாது என நடிகரின் வீட்டிலிருந்து முதல் கண்டிஷன் விழ; அதையும் லாவகமாக பேசி நடிகை நடிக்கலாம் என்று வீட்டில் ஒத்துக்கொள்ள வைத்துவிட்டாராம்.

வரதட்சணை கேட்கும் குடும்பம்: இந்நிலையில் வரதட்சணையாக நடிகரின் வீட்டில் கேட்டிருக்கும் விஷயங்கள்தான் நடிகைக்கு தலை சுற்ற வைக்கிறதாம். அதாவது 500 பவுன் நகை, கோடி கோடியாக பணத்தைத்தான் அவர்கள் கேட்டிருக்கிறார்களாம். இதிலும் தலையிட்டு வீட்டார் போட்டிருக்கும் கண்டிஷனை தளர்த்தி விடலாம் என்று முடிவெடுத்து பேச சென்ற நடிகரிடமோ, 'நீ சொன்னதால்தான் திருமணத்துக்கு பிறகு அவர் நடிப்பதற்கே நாங்கள் ஒத்துக்கொண்டோம். வரதட்சணை எல்லாம் பெரியவர்கள் விஷயம். நீ தலையிடாதே' என்று சொல்லிவிட்டார்களாம். இதனால் வேறு வழியில்லாமல் நடிகர் மௌனமாக இருக்கிறாராம். அதேசமயம் இப்போதே வரதட்சணை விஷயத்தில் இப்படி கறாராக இருக்கிறார்களே என நடிகையும் அவரது குடும்பமும் டல்லாகிவிட்டார்கள். இருந்தாலும் அவர்கள் கேட்பதை கொடுத்துவிடலாம் என்ற முடிவுக்கு நடிகையும் வந்துவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X