கருவை கலைத்த மருத்துவருடன் டீலிங்.. அக்கவுண்ட்டுக்கு போன கூடுதல் பணம்.. நடிகை செம தெளிவுதான் பாஸ்
சென்னை: இந்திய அளவில் ஃபேமஸான நடிகையாக இருப்பவர் அவர். கடந்த சில வருடங்களாகவே அவர் கைகளில் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. இப்படி அவரது கரியர் சூப்பராக போய்க்கொண்டிருக்கும்போது அந்த நடிகருடன் ஏற்பட்ட பழக்கம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்தது. அதன் பலனாக நடிகை கர்ப்பமாகிவிட்டாராம். இந்நிலையில் அம்மணி பற்றி புதிய கிசுகிசு ஒன்று வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் கடந்த இரண்டு தசாப்தங்களாக தனக்கென தனி மார்க்கெட்டை வைத்திருப்பவர் அந்த நடிகை. கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துவிட்ட அவர்; ஒரு ஹீரோவுடன் மட்டும் கொஞ்சம் கூடுதலாகவே நெருக்கம் காண்பித்தார். ஆனால் அந்த நடிகருக்கு ஏற்கனவே திருமணமும் ஆகிவிட்டது. நடிகரும் இந்த விஷயத்தில் ராமன் இல்லை என்பதால் நடிகை காட்டிய நெருக்கத்தை ரொம்பவே ஆத்மார்த்தமாக அனுபவிக்க ஆரம்பித்தார்.

வீட்டில் சண்டை: ஒருகட்டத்தில் நடிகருக்கும், நடிகைக்கும் இருக்கும் அன்யோன்யம் நடிகரின் மனைவிக்கு தெரிந்துவிட வீட்டில் சண்டை நாறிவிட்டது. இனிமேல் அந்த நடிகையுடன் நடிக்கமாட்டேன் என்று உறுதி கூறி; மனைவி சொல்படி நடக்க ஆரம்பித்தார். நடிகையும் வேறு ரூட்டில் பயணப்பட்டார். அப்போதும் அவருக்கு சில காதல்கள் தோன்றி மறைந்துவிட்டன. எதுவும் திருமணம் வரை செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இனிமேல் எந்த ஆணையும் நம்பவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
மீண்டும் பேட்ச் அப் ஆன ஜோடி: அப்படிப்பட்ட நிலைமையில்தான் பான் இந்தியா படத்தில் பல வருடங்களுக்கு பிறகு இரண்டு பேரும் சேர்ந்து நடித்தார்கள். அப்போது அவர்களுக்குள் பழைய நினைவுகள் மலர்ந்துவிட; அணைந்திருந்த நெருப்பு மீண்டும் பற்றிக்கொண்டது. ஒன்றாக வெளிநாடுகளுக்கு செல்வது; மாறி மாறி பரிசுகள் கொடுத்துக்கொள்வது என பேட்ச் அப் ஆகிவிட்டார்கள். இதற்கிடையே நடிகையுடனான நெருக்கம் மீண்டும் வந்துவிட்டதால்; மனைவியை கழற்றிவிடவும் செய்துவிட்டார் நடிகர்.
கர்ப்பமான நடிகை: மனைவியும் நடிகருடன் தீவிரமான சண்டையை போட்டுவிட்டு தன் தாய் வீட்டுக்கு சென்றுவிட; தான் மட்டும் இருக்கும் பங்களாவிலேயே நடிகையை குடி வைத்துவிட்டார். அவரது நண்பர்கள் எவ்வளவோ எச்சரித்தும் எதுவுமே கேட்கவில்லையாம். இரண்டு பேரும் சேர்ந்து அந்த வீட்டுக்குள் தனிக்குடித்தனமே நடத்தினார்கள். அதன் பலனாக அம்மணி கர்ப்பமாகிவிட்டாராம். இதை எதிர்பார்க்காத நடிகர்; உடனடியாக கலைத்துவிட வேண்டுகோள் வைக்க; நடிகையும் அதன்படியே செய்திருக்கிறார்.
எக்கச்சக்க பணம்: தமிழ்நாட்டில் ஃபேமஸாக இருக்கும் ஒரு மருத்துவரை அணுகி; கருவை கலைக்க வேண்டும் என சொல்ல; முதலில் அந்த டாக்டர் ஒத்துக்கொள்ளவே இல்லையாம். ஆனால் நடிகரும், நடிகையும் விடாமல் பேசி அவரை காம்ப்ரமைஸ் செய்ததன் காரணமாக அதை செய்வதற்கு ஒத்துக்கொண்டிருக்கிறார். இதற்காக பல கோடி ரூபாயை இறக்கினார்களாம். மேலும் இந்த விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம் என கூறி; இன்னும் சில கோடிகளை அந்த மருத்துவரின் அக்கவுண்ட்டுக்கு அனுப்பிவிட்டார்களாம் இரண்டு பேரும். அதன் காரணமாக அந்த மருத்துவரும் விஷயத்தை மூடி மறைத்துவிட; நிம்மதியாக இருந்தார்களாம். ஆனால் நடிகை கர்ப்பமானதும் அதை கலைத்ததும் எப்படி வெளியே தெரிய வந்தது என்பது தெரியாமல் தலை பிய்த்துக்கொண்டிருக்கிறார்களாம் நடிகரும், நடிகையும்.


Click it and Unblock the Notifications















