விநியோகஸ்தர்களை கண்டபடி திட்டிய பான் இந்தியா ஹீரோ.. இந்த தடவையும் பல்பு ஃபியூஸ் ஆகிடும் போல?
சென்னை: பான் இந்தியா ஹீரோ படத்துக்கு உள்ளூரில் மட்டும் தான் இந்த முறை மார்க்கெட் ஓபனாகி இருக்கிறதாம். மற்றபடி அனைத்து இடங்களிலும் பலத்த அடி விழுந்திருப்பதால் மனுஷன் பயங்கர காண்டில் இருக்கிறார் என்கின்றனர்.
பலமுறை அந்த நடிகரை நம்பி பணம் போட்டு வாங்கிய மற்ற ஸ்டேட் விநியோகஸ்தர்கள் மற்றும் ஓவர்சீஸ் விநியோகஸ்தர்கள் எல்லாம் இந்த முறை போதும்டா சாமி என ஒரே ஒட்டமாக ஓடிவிட்டதாக கூறுகின்றனர்.
சொந்த ஸ்டேட்டை தவிர்த்து பக்கத்து ஸ்டேட்டில் கூட அந்த படத்துக்கு பெரிய வரவேற்பு இல்லை என்பதை பார்த்து டென்ஷனான நடிகர் விநியோகஸ்தர்களை அழைத்து சத்தம் போட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.

பல பிரச்சனை: படத்தின் நீளம், நடிகரின் பாஸ்ட் ரெக்கார்டு, கலர் டோன், தணிக்கை சான்றிதழ் என பல பிரச்சனைகள் இருப்பதால் இந்த படத்தை வாங்க பெரிதும் யாரும் ஆர்வம் காட்டவில்லை என்கின்றனர். மேலும், அந்த நடிகரும் பெரியளவில் புரமோஷன்களை பக்கத்து ஸ்டேட்களில் கூட இந்த முறை நடத்தாமல் அமைதி காத்து வருவது பலத்த அடி வசூலில் விழும் என்கின்றனர்.
இயக்குநர் ஊரிலேயே: ஏற்கனவே பிரம்மாண்ட கோல்ட் படத்தை இயக்கி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த இயக்குநரின் ஊரிலேயே தற்போது இந்த படத்துக்கு மவுசு இல்லை என்பது தான் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பான் இந்தியா நடிகர்கள் இடம்பெறாதது மற்றும் சரியான புரமோஷன் இல்லாத காரணங்கள் தான் இதற்கு காரணம் என்றாலும், இன்னொரு நடிகரின் சூழ்ச்சியும் அதிகம் உள்ளது என்கின்றனர்.
ஆப்பு வைத்த நடிகர்: பெரிய விநியோகஸ்தர்களை சமீபத்தில் அழைத்து பெரிய விருந்தே அந்த பாலிவுட் நடிகர் வைத்திருக்கிறாராம். எல்லாருமே அந்த பக்கம் சென்ற நிலையில், இந்த நடிகர் பக்கம் மிச்சம் மீதி இருப்பவர்களே உள்ள நிலையில் தான் இந்த நிலை என்கின்றனர். சொந்த ஊரில் படம் பெரிய வெற்றி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும் பான் இந்தியா அந்தஸ்த்து அந்த நடிகருக்கு போய் விடும் என்பது தான் பெரிய பாதிப்பாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் மனுஷன் ரொம்பவே கடுப்பில் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி திட்டி விட்டார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











