வாய் மட்டும் தான்.. செயலில் ஒன்னத்தையும் காணோம்.. நடிகரோடு வீக் எண்ட்க்குப்போய் விரக்தியில் நடிகை

By Staff

சென்னை: சென்னை: தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் இளம் நடிகை ஒருவர், சமீப காலமாக பான் இந்தியா ஹீரோவாக உயர்ந்துள்ள நடிகர் ஒருவருடன் நெருக்கமாக பழகி வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இருவரும் இணைந்து நடித்த படம் பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு அந்த நட்பு இன்னும் நெருக்கமானதாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

அந்த நடிகர், "அடுத்த படம் நம்ம இருவரும் சேர்ந்து பண்ணலாம்", "பெரிய இயக்குநரிடம் உங்களைப் பற்றி பேசி வைத்திருக்கிறேன்", "உங்களுக்கு ஏற்ற கதையை நான் பார்த்துக்கொள்கிறேன்" என அடிக்கடி வாக்குறுதிகளை அள்ளி வீசியதாகவும், அதனால் நடிகையும் முழு நம்பிக்கையுடன் சில பட வாய்ப்புகளைக் கூட ஒதுக்கி வைத்ததாகவும் சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

இதற்கிடையில், கடந்த வார இறுதியில் இருவரும் வெளிநகரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் சந்தித்ததோடு, அதன் பிறகு முழு வீக் எண்டையும் ஒன்றாக செலவிட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த சந்திப்பிலாவது புதிய படம் குறித்த உறுதியான அறிவிப்பு அல்லது தயாரிப்பாளர்களுடன் மீட்டிங் இருக்கும் என நடிகை எதிர்பார்த்தாராம்.

Pan-India Star s Promises Leave Actress Disappointed Fresh Kollywood Gossip Sparks Buzz

வீணாக போன விக் எண்ட்: ஆனால் நடந்தது வேறு. வழக்கம்போல் பெரிய பெரிய பேச்சுகள், எதிர்கால திட்டங்கள், "இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்ற ஆறுதல் வார்த்தைகள் மட்டுமே கிடைத்ததாம். எந்த இயக்குநரிடமும் அறிமுகம் இல்லை, எந்த தயாரிப்பாளருடனும் சந்திப்பு இல்லை, புதிய பட ஒப்பந்தம் பற்றிய முன்னேற்றமும் இல்லையாம். இதனால், "வாயில் மட்டும் பெரிய பெரிய வாக்குறுதிகள்... ஆனால் செயலில் ஒன்றையும் காணோம்" என்று தனது நெருங்கிய வட்டாரத்தில் நடிகை கடும் விரக்தியுடன் பேசியதாக கோலிவுட் கிசுகிசு கிளம்பியுள்ளது.

நடிகை எடுத்து முடிவு: இதற்குப் பிறகு, இனிமேல் யாருடைய வாய்மொழி வாக்குறுதியையும் நம்பாமல், ஒப்பந்தம் கையில் வந்த பிறகே எந்த முடிவும் எடுக்க வேண்டும் என்ற மனநிலைக்கு அந்த நடிகை வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கிசுகிசு எந்த நடிகர், நடிகையைப் பற்றியது என்ற கேள்வி தற்போது கோலிவுட் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா வட்டாரங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X