இந்த படமும் ஊத்திக்கிட்டா அவ்ளோதான்.. பதற்றத்தில் பான் இந்தியா ஹீரோ.. மாஸ்டரோட மேஜிக் பலிக்குமா?
சென்னை: அந்த தெலுங்கு பட நடிகரை பான் இந்தியா ரேஞ்சுக்கு வளர்த்து விட்ட மாஸ்டரை அதன் பின்னர் கண்டு கொள்ளாமல் அடுத்து அடுத்து அதிக சம்பளம் கொடுக்கும் தயாரிப்பு நிறுவனங்களையும் பாலிவுட் இயக்குநர்களையும் தேடி ஓடிப் போய்க் கொண்டிருந்தார் அந்த பான் இந்தியா நடிகர்.
ஆனால், இதுவரை அவருக்கு எதிர்பார்த்த வெற்றியே கிடைக்காமல் ஃபிளாப் படங்களே வரிசை கட்டின. மேலும், மாஸ்டர் இல்லாமல் இவர் வெறும் டம்மி பீஸ் தான் என்றும் கலாய்க்க ஆரம்பித்த நிலையில், நடிகரின் ஈகோ மேலும், அதிகரித்து விட்டது.
இதுவரை அந்த மாஸ்டர் உதவியை நாடாமல் இருந்து வந்த நடிகர் இந்த முறை கடைசி நேரத்தில் அதிக பயம் ஏற்பட மாஸ்டரின் உதவியை நாடி உள்ளாராம்.

பிசினஸ் மாஸ்டர்: படத்தை இயக்குவதெல்லாம் யார் வேண்டுமானால் செய்வார்கள். ஆனால், அதை பக்காவாக மார்க்கெட்டிங் செய்து பிசினஸ் பண்ணும் திறமை இந்தியாவிலேயே சில இயக்குநர்களால் மட்டுமே சாத்தியமாக்கப்பட்டு வருகிறது. அதிலும், அந்த பிரம்மாண்ட மாஸ்டர் அதில் தனி ஸ்பெஷாலிட்டி என்று கூறுகின்றனர்.
ஈகோ எல்லாம் காலி: பல கோடி ரூபாயை பான் இந்தியா நடிகரை நம்பி கொட்டி வீணாகி வரும் நிலையில், நடிகருக்கே தன் மீது இருந்த நம்பிக்கை எல்லாம் சுக்கு நூறாக போய் விட்டதாக கூறுகின்றனர். பழைய ஈகோவை எல்லாம் விட்டு விட்டு குருவே சரணம் என மாஸ்டர் காலிலேயே விழுந்து விட்டாராம்.
கடைசி நேரத்தில்: அந்த மாஸ்டரும் இப்போ வந்ததை சில மாதங்களுக்கு முன்பு வந்திருந்தால் வேறலெவலில் பிசினஸ் செய்து கொடுத்திருப்பேனே என்றும் கடைசி நேரத்தில் வந்து விட்டு சங்கரா சங்கரா என்றால் என்ன செய்வது என சொல்லிவிட்டு, தனது மேஜிக்கை கடைசி நேரத்தில் காட்ட அனைத்து வேலைகளையும் ஆரம்பித்துள்ளதாக கூறுகின்றனர்.
வேர்ல்ட் வைட் லிங்க்: இந்தியாவிலேயே அந்த நடிகர் படம் ஓடவில்லை என்றாலும் ஓவர்சீஸில் வசூல் வேட்டை நடத்துவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் ஒரே வாரத்தில் செய்துக் கொடுத்திருக்கிறார் அந்த மாஸ்டர் மைண்ட் இயக்குநர் என்கின்றனர். மேலும், இன்னொரு படத்தையும் தன்னை வைத்து இயக்க கோரிக்கையும் வைத்திருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











