ஓவராக ஆட்டம் போடும் நடிகை.. கால்கட்டுப் போட முடியாமல் நொந்து நூடுல்ஸ் ஆன பெற்றோர்!

சர்ச்சை நடிகைக்கு விரைவில் மீண்டும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்புகின்றனராம்.

Recommended Video

பால் நடிகைக்கு கால் கட்டு போட முடியாமல் தவிக்கும் பெற்றோர்- வீடியோ

சென்னை: கணவரைப் பிரிந்த நடிகை தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவதால், சீக்கிரம் அவருக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்க தீவிரமாக வரன் தேடி வருகின்றனராம் அவரது பெற்றோர்.

அறிமுகப் படத்திலேயே சர்ச்சையில் சிக்கியவர் இந்த நடிகை. ஆனால் அடுத்த படம் வெற்றிப்படமானதால் ராசியான நடிகை என தமிழ் சினிமா அவரைக் கொண்டாடியது. உடன் நடித்த நடிகர்கள் சிலருடன் கிசுகிசுவிலும் சிக்கினார்.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தன்னை இயக்கிய காதலரையே கரம் பிடித்து செட்டிலானார். சரி, இனி அவர் மறுபடியும் படத்தில் நடிக்க மாட்டார் என ரசிகர்கள் நினைத்த நேரத்தில், கணவரைப் பிரிந்து ரீஎண்ட்ரி கொடுத்தார்.

கவர்ச்சியில் தாராளம்:

கவர்ச்சியில் தாராளம்:

ஆரம்பத்தில் சொல்லிக் கொள்ளும் படவாய்ப்புகள் அமையாவிட்டாலும், காலப்போக்கில் சூடு பிடித்தது நடிகையின் மார்க்கெட். நடிகையும் திருமணத்திற்கு முன்பிருந்ததைவிட, பின்பு கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.

புதிய படவாய்ப்புகள்:

புதிய படவாய்ப்புகள்:

இதன் பலனாக கை நிறைய பட வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்துள்ளது. மேலும், பட வாய்ப்புகளைப் பெறும் வகையில் அடிக்கடி தனது சமூகவலைதளப் பக்கங்களில் கவர்ச்சிப் படங்களாகப் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

பெற்றோரின் விருப்பம்:

பெற்றோரின் விருப்பம்:

ஆனால், இது நடிகையின் பெற்றோருக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லையாம். மீண்டும் அவரைக் குடும்பத்தலைவி ஆக்குவது தான், அவர்களது தற்போதைய லட்சியமாக இருக்கிறது. இதற்காக தீவிரமாக வரன் தேடி வருகின்றனர் அவர்கள்.

மறுப்பு:

மறுப்பு:

இந்த நேரத்தில் போய், நடிகை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருப்பது அவர்களை வேதனைப்பட வைத்திருக்கிறது. ஆனால், பெற்றோர் அறிவுரையைக் கேட்டு, தன் நடவடிக்கையை மாற்றிக் கொள்ள மறுக்கிறாராம் நடிகை. இதனால் அவரது பெற்றோர் மிகுந்த மனவேதனையில் இருக்கின்றனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X