பெண் கிடைக்காத விரக்தியில் நடிகர்: கவலையில் பெற்றோர்
சென்னை: வாரிசு நடிகர் விரக்தி அடைந்துள்ளதை பார்த்த பெற்றோர் பெண் பார்க்கும் படலத்தை முடுக்கிவிட்டுள்ளார்களாம்.
வாரிசு நடிகருக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. அவர் வாழ்வில் காதல் வருவதும் போவதுமாக உள்ளது. எந்த காதலும் திருமணம் வரை செல்லவில்லை.
இதற்கிடையே நடிகரின் கெரியரும் பயங்கர அடி வாங்கியது.

பிக்கப்
படுத்து தூங்கிக் கொண்டிருந்த நடிகரின் கெரியர் சூப்பராக பிக்கப்பாகியுள்ளது. இதனால் நடிகர் கை நிறைய படங்கள் வைத்துக் கொண்டு பிசியாக நடிக்கிறார். இயக்குனர்கள் அவரை ஒப்பந்தம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர்.

பெண்
நடிகருக்கு வயது ஏறிக் கொண்டே போகிறது. ஆனால் இன்னும் திருமணம் மட்டும் நடக்கவில்லை. அவருக்காக அவரின் பெற்றோரும் சில காலமாகவே பெண் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு பெண்ணும் அமையவில்லை.

பிரம்மசாரி
நடிகர் எதிர்பார்க்கும் குணங்களுடைய பெண் கிடைக்கவில்லையாம். இதை பார்த்த நடிகரோ எனக்கு கல்யாணமே வேண்டாம், நான் சிங்கிளாகவே இருந்துவிடுகிறேன் என்று பெற்றோரிடம் விரக்தியில் பேசியுள்ளார். மகன் விரக்தி அடைந்ததை பார்த்த பெற்றோருக்கு கவலையாகிவிட்டது.

பெண்
மகனின் நிலையை பார்த்த பெற்றோர் பெண் பார்க்கும் வேலையை தீவிரப்படுத்தியுள்ளார்களாம். எப்படியாவது அவருக்கு பிடித்த பெண்ணை தேடிக் கண்டுபிடித்து உடனே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஒரு முடிவுக்கு வந்துள்ளனர் பெற்றோர்.


Click it and Unblock the Notifications











