»   »  வைகைப்புயல் ரிட்டர்ன்... புதுஸ்சா டீம் ஃபார்ம் பண்ணிய பரோட்டா!

வைகைப்புயல் ரிட்டர்ன்... புதுஸ்சா டீம் ஃபார்ம் பண்ணிய பரோட்டா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்ற நிலையில்தான் சில ஆண்டுகளாக தமிழ் சினிமா காமெடி இருந்து வந்தது. காரணம் வடிவேலு ஒதுங்கியிருந்தது தான்.

சந்தானமும் ஹீரோவாகி விட்டதால் தமிழில் காமெடி வறட்சி நிலவியது. அதைப் போக்க மீண்டும் வந்துவிட்டார் வடிவேலு மீண்டும். கத்திச் சண்டையில் காமெடியனாக மீண்டும் அவதாரம் எடுத்திருக்கும் வடிவேலு அந்த படம் முடியும் முன்பே லாரன்ஸின் சிவலிங்காவில் பிஸி.

Parotta forms new team to manage Vaigai Puyal

மீண்டும் வடிவேலு வீட்டை நோக்கி தயாரிப்பாளர்கள் படையெடுத்து வருகிறார்கள். இதனால் இனி நோ ஹீரோ... ஒன்லி காமெடி என முடிவெடுத்துவிட்டார் வடிவேலு.

இது யாருக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறதோ இல்லையோ பரோட்டா நடிகருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதுவரை வேறு காமெடியன் யாரும் இல்லாததால் பரோட்டாவை வைத்து மொக்கை கச்சேரி நடத்தி வந்தார்கள் இயக்குநர்கள்.

பரோட்டாவும் வாங்குற காசுக்கு கொஞ்சமாவது வேலை செய்யாமல் ஓட்டிக்கொண்டு வந்தார். இனி அது பலிக்காது என தெரிந்ததால் ஸ்ட்ராங்காக ஒரு டீம் ஃபார்ம் பண்ணிவிட்டாராம்.

அந்த டீமுக்கு தலைமையாக பரோட்டா நியமித்திருப்பது தளபதியை வைத்து கடல் மீன் ஃப்ளாப் கொடுத்த இனிஷியல் இயக்குனரை. அதோடு புயலின் டீமில் இருந்து யார் வந்தாலும் நல்ல பேமெண்ட் கொடுத்து இழுத்துக்கொள்கிறாராம்!

English summary
Paroota comedian is in trouble due to the return of Vaigai Puyal to comedy roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil