அம்மா வேடம்... ‘நாயகன்’ நாயகிக்கு போட்டியாக களமிறங்கும் மயிலு
சென்னை: அம்மா வேடம் என்றாலே 'நாயகன்' நாயகி தான் இயக்குநர்களுக்கு முதலில் நினைவில் வருகிறார். அந்தளவுக்கு நடிகை அந்தந்த கதாபாத்திரங்களுடன் ஒன்றிப் போய் விடுகிறார்.
பெரும்பாலான படங்களில் மகனின் காதலுக்கு சப்போர்ட் செய்யும் தாயாகவே நடிகை நடித்தாலும், தனது கதாபாத்திரங்களில் அவர் காட்டும் வித்தியாசத்தால் அம்மா வாய்ப்புகள் அவர் வாசல் தேடி வருகின்றன.
இந்த அம்மா கதாபாத்திரத்திற்காகவே நடிகை தேசிய விருது கூட வாங்கினார். நடிகையின் டிமாண்ட் கூடிப்போனதால், அவருக்கு போட்டியாக வேறு பல முண்ணனி நடிகைகளை அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பலர் முயற்சி மேற்கொண்டார்கள். ஆனால், அவர்களது முயற்சி பலிக்கவில்லை.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மயிலு நடிகை வெள்ளித்திரையில் மீண்டும் பிரவேசம் செய்ய இருக்கிறார். நடித்தால் நாயகி தான் என்ற தனது கொள்கையை சற்று தளர்த்தி 'நல்ல கதாபாத்திரமாக இருந்தால் ஓகே' என்ற அறிவிப்பால் மயிலுக்கு தற்போது இரண்டு அம்மா வேடங்கள் வந்துள்ளதாம்.
தான் நாயகியாக நடித்த காலத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வாழ்ந்தவர் மயிலு நடிகை. எனவே, அவரது அம்மா பாத்திரம் மிகவும் பேசப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.


Click it and Unblock the Notifications











