ஏன் டைரக்டர், உங்களுக்கு வேறு ஹீரோயினே கிடைக்கவில்லையா?: பாவப்படும் கோலிவுட்

By Siva

Recommended Video

டைரக்டர், உங்களுக்கு வேறு ஹீரோயினே கிடைக்கவில்லையா? : கோலிவுட் கிசுகிசு

சென்னை: இயக்குனர் ஒருவர் நடிக்கத் தெரியாத நடிகையை நம்பி பெரிய படத்தை எடுத்துள்ளார்.

பிரபலம் ஒருவர் இயக்கிய முதல் தமிழ் படம் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் அவர் சமத்தான நடிகையை வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார்.

ரீமேக் படமான அதில் நடிகை தான் ஹீரோ. அதாவது ஹீரோயினை சுற்றியே நகரும் கதை கொண்ட படம்.

நடிப்பு

நடிப்பு

அந்த நடிகை நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் நடிக்கத் தெரியவில்லை என்ற விமர்சனம் உள்ளது. சும்மா சிரித்து, டான்ஸ் ஆடிவிட்டால் போதுமா என்று திரையுலகினர் அவரை பற்றி பேசுகிறார்கள். இந்நிலையில் தான் அவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்துள்ளார்.

நடிப்பு ராட்சசி

நடிப்பு ராட்சசி

ஒரிஜினல் படத்தில் நடிப்பு ராட்சசி நடித்திருந்தார். நம்ம சுள்ளான் அளவுக்கு நடிப்பில் மிரட்டுவார் அந்த நடிகை. அவர் நடித்த படத்தின் ரீமேக்கில் சமத்தான நடிகையை நடிக்க வைத்துள்ளார் அந்த இயக்குனர். நடிக்கத் தெரியாத நடிகையை நம்பி எப்படி இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்தார் என்று இயக்குனரை பார்த்து வியக்கிறார்கள்.

படம்

படம்

சமத்தான நடிகை இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக இயக்குனர் பெருமையாக கூறி வருகிறார். அவர் நம்பிக்கை வீண் போகாமல் இருந்தால் சரி. இல்லை என்றால் இந்த படமும் அவருக்கு பப்படமாகிவிடும். நடிகையின் மீது இயக்குனருக்கு இருக்கும் நம்பிக்கை மற்றவர்களுக்கு இல்லை. மண் குதிரையை நம்பி அவர் ஆற்றில் இறங்கியுள்ளதாக கூறுகிறார்கள்.

நல்ல பெயர்

நல்ல பெயர்

நடிக்கத் தெரியாமல் அவர் எப்படி இத்தனை ஆண்டுகள் தாக்குப்பிடித்தார் என்று நினைக்கலாம். ஹீரோக்கள், இயக்குனர்களிடம் நல்ல பெயர் எடுத்துள்ளார் அவர். படப்பிடிப்பு தளத்திற்கு ஹீரோக்கள் எத்தனை மணிநேரம் தாமதமாக வந்தாலும் பிரச்சனை செய்ய மாட்டார். இதனாலேயே அவருக்கு சமத்து நடிகை என்ற பெயர் கிடைத்துள்ளது. அந்த நல்ல பெயரை வைத்து தான் பட வாய்ப்புகள் பெறுகிறார்.

யார் கண்டது

யார் கண்டது

இப்படித் தான் முன்பு ஒரு நடிகை நடித்த படம் ஹிட்டாகவே ஆகாது என்றார்கள். யார் கதாபாத்திரத்தில் யார் நடிப்பது என்று கண்டமேனிக்கு கலாய்த்தார்கள். கடைசியில் பார்த்தால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அது போன்று இந்த படமும் கூட சூப்பர் ஹிட்டாகலாம். யார் கண்டது?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X