»   »  போட்டுக் கொடுத்த நண்பனின் அப்பா… புலம்பும் நடிகர்!

போட்டுக் கொடுத்த நண்பனின் அப்பா… புலம்பும் நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிக்கப் நடிகருக்கு வரிசையாக தோல்விகள். சொந்த தயாரிப்புகளும் வரிசையாக ஊத்திக்கொள்ள என்ன செய்வது என்றே தெரியாமல் விழித்தார்.

கிசுகிசுக்கள் எதுவும் வராததால் ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவோம் என்ற பயமும் ஏற்பட, தயாரிப்பாளரான நண்பனின் அப்பாவை அணுகினார்.

தான் இனி படம் தயாரித்தால், முந்தைய படங்களின் தோல்விகள் தன் படத்தைப் பாதிக்கும். எனவே உங்க பேனர்லயே படம் இருக்கட்டும். என் காசுல எடுத்துக்கிறேன் என்று டீல் பேசி சம்மதம் வாங்கிவிட்டார்.

ஷூட்டிங் முடியவிருக்கும் நிலையில் படத்தை தயாரிப்பது நடிகர் தான் என செய்தி பரவிவிட்டது. எல்லாம் நண்பனின் அப்பாவால் வந்தது. அவரே எல்லோரிடமும் இது என் பணம் கிடையாது. அவரை வெச்சு இப்ப யாரு படம் எடுப்பா? என்ற ரீதியில் உண்மையை உளறிக்கொட்டியதால் வந்த வினை இது.

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறாராம் ஹீரோ!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Pickup hero is in trouble now due to his close friend's father has revealed all the secrets behind his new movie production.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil