கைவிட்ட பிக்கப் நடிகர்... அதிர்ச்சியில் இயக்குநர்!
பிக்கப் நடிகர் நடித்த படங்கள் வரிசையாக ஃப்ளாப் அடித்தன. ஆனால் ஏற்கனவே போட்டிருந்த ஒப்பந்தப்படி நடிகரை வைத்து ஜல்லிக்கட்டு படத்தை தொடங்கினார் அந்த தாடி இயக்குநர்.
படம் தொடங்கியதில் இருந்தே இயக்குநரின் படங்களுக்கு வழக்கமாக ஏற்படுவது போலவே சிக்கல்கள் தொடர்ந்தன. விட்டு விட்டு ஷூட்டிங் சில நாட்கள் நடத்தப்பட்ட நிலையில் இது வேலைக்கு ஆகாது என்று எண்ணிய நடிகர் பசுமை நிறுவன தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க சென்று விட்டார்.
படத்தை முடிக்க நடிகர் உதவி செய்வார் என்று எண்ணியிருந்த இயக்குநருக்கு இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம். நடிகர் நடித்துக்கொண்டிருக்கும் படம் முடிந்த உடன் ஒரு டிவி நிகழ்ச்சிக்கும் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications