»   »  பிக்கப் டிராப் நடிகரின் புதிய தோழியான 'சேச்சி': மனைவியாகக்கூடுமாம்!

பிக்கப் டிராப் நடிகரின் புதிய தோழியான 'சேச்சி': மனைவியாகக்கூடுமாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்கப் டிராப் நடிகரின் லேட்டஸ்ட் தோழியாக ஆகியுள்ளாராம் சேச்சி நடிகை.

பிக்கப் டிராப் நடிகருக்கு திரைத்துறையில் ஏராளமான தோழிகள். சிலருடன் அவருக்கு காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. அதன் பிறகு அந்த காதல்கள் என்ன ஆனது என்றே தெரியவில்லை. இந்நிலையில் நடிகருக்கு திருமணத்திற்காக வீட்டில் பெண் தேடுகிறார்கள்.

போகும் இடமெல்லாம் நடிகரின் பிக்கப் டிராப் விஷயம் தெரிந்து பெண் தர மறுக்கிறார்களாம். இதனால் நடிகரை அடக்கி வாசிக்குமாறு வீட்டில் அறிவுறுத்தியுள்ளார்களாம். பெண் பார்க்கும் படலம் ஒரு பக்கம் நடக்க நடிகர் தம்பி நடிகருடன் நடித்த சேச்சி நடிகையுடன் நெருக்கமாகியுள்ளாராம்.

அவர் ஒரு நடிகையுடன் நட்பாவது பெரிய விஷயம் இல்லை தான். ஆனால் இந்த குறிப்பிட்ட நட்பு காதலாகி திருமணம் வரைக்கும் செல்லும் என்று விஷயம் அறிந்த நபர் ஒருவர் கற்பூரத்தை அடித்து சத்தியம் செய்யாத குறையாக கூறியுள்ளார்.

இப்படி தான் பாஸு அந்த தாரகை நடிகையை பற்றியும் கூறினார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

English summary
Buzz is that Pickup drop actor has got a new girlfriend.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil