பிக்கப் டிராப் நடிகருக்கு தங்கமான மனசு!
சென்னை: பிக்கப் டிராப் நடிகருக்கு தங்கமான மனசா எதை வைத்து சொல்கிறீர்கள் என்று கேட்டால் செய்தியை படித்து பாருங்கள்.
படப்பிடிப்பு தளத்தில் நடிகைகளுடன் கடலை போட பெயர் போன அந்த இளம் ஹீரோவுக்கு பிக்கப் டிராப் என்ற பெயர் நிரந்தரமாகிவிட்டது. இந்த பிக்கப் டிராப் விஷயத்தாலேயே அவருக்கு திருமணத்திற்கு பெண் கிடைப்பதில் சிக்கலாக உள்ளது.
ஆனால் அவருக்கு தங்கமான மனசும் உண்டு. தனது சக ஹீரோக்களை தனக்கு போட்டியாக நினைக்காமல் அனைவருடனும் நட்பாக பழகுகிறாராம். மேலும் தன்னை தேடி வரும் பட வாய்ப்புகளில் தனக்கு உகந்ததாக இல்லாதவற்றை அது யாருக்கு பொறுத்தமாக இருக்குமோ அந்த ஹீரோவின் பெயரை பரிந்துரை செய்கிறாராம்.
ஒரு ஹீரோ மற்றொரு ஹீரோவை பரிந்துரைப்பது அவர்களுடன் போட்டி பொறாமை இன்றி நட்பாக பழகுவது ஆரோக்கியமான சூழல் ஆகும்.
Comments


Click it and Unblock the Notifications