பிக்கப் டிராப் நடிகருக்கு உறவுக்கார பெண்ணுடன் திருமணமா?: அப்போ அந்த 3 பேர்?
சென்னை: பிக்கப் டிராப் நடிகருக்கு உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரின் அம்மா முடிவு செய்துள்ளாராம்.
பிக்கப் டிராப் நடிகருக்கு வயது ஏறிக் கொண்டே போகிறது ஆனால் இன்னும் திருமணம் நடக்கவில்லை. இந்நிலையில் டிவி சேனல் ஒன்று அவருக்கு பெண் தேடும் நிகழ்ச்சியை நடத்தியது.
நடிகரோ எந்த பெண்ணையும் தேர்வு செய்யாமல் எஸ்கேப் ஆகிவிட்டார். நடிகரின் பிக்கப் டிராப் விஷயத்தால் தான் அவருக்கு பெண் கிடைப்பதில் பிரச்சனையாக உள்ளது என்று கூறப்பட்ட நிலையில் டிவி நிகழ்ச்சிக்கு வந்த பெண்களில் யாரையும் அவர் தேர்வு செய்யவில்லை.
டிவி நிகழ்ச்சியிலும் பெண்ணை தேர்வு செய்யாததை பார்த்த நடிகரின் அம்மா ஒரு முடிவுக்கு வந்துள்ளாராம். அதாவது உறவுக்கார பெண்ணை நடிகருக்கு திருமணம் செய்து வைக்க தீர்மானித்துள்ளாராம்.
அப்போ, டிவி நிகழ்ச்சியில் தேர்வான 3 பேரில் ஒருவரை நடிகர் திருமணம் செய்ய மாட்டாரா? யாரை தேர்வு செய்வது என்பதை தீர்மானிக்க கூடுதல் கால அவகாசம் தானே கேட்டார்?


Click it and Unblock the Notifications











