»   »  அடிச்சிக் கூடக் கேப்பாங்க... அப்பவும் சொல்லிராதே!

அடிச்சிக் கூடக் கேப்பாங்க... அப்பவும் சொல்லிராதே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

"இப்ப போலீஸ் வரும்...
அவன் என்ன சொன்னான்னு கேப்பாங்க...
எதையும் சொல்லிடாதீங்க...
அடிச்சி கூட கேப்பாங்க...
அப்பவும் சொல்லிடாதீங்க... "

சொல்லிவிட்டு போண்டா மணி ஓடிவிடுவார்.

கொஞ்ச நேரத்தில் போலீஸ் வரும்... "ஏ.. இப்ப போனானே அவன் உங்கிட்ட என்னமோ சொன்னானே அத சொல்லு"ன்னு கேக்கும்.

முதல் பாராவில் படித்ததை வடிவேலு சொல்லுவார்...

போலீஸ் கடுப்பாகி அடித்துத் துவைக்கும். காமெடியாக சினிமாவில் வந்த காட்சி இது...

இப்ப நிஜத்தில்....

நடுராத்திரி திடீர்னு போன் வருது... புது நம்பரா இருக்கேன்னு தயங்கி, பலமுறை அடிச்ச பிறகு எடுத்து, இவர் 'ஹலோ' சொன்னாரா... எதிர் முனையில அவர் 'நான்தான் பேசுறேன்'னு சொன்னாரா.... லைன் கட் ஆகிடுச்சி.

கொஞ்ச நேரத்தில் போலீஸ் கேட்டுது, "நான் தான் பேசுறேன்னு சொல்லிட்டு என்ன பேசுனார்"...

"நடு ராத்திரியில போன் அடிச்சுதா... நான் எடுத்து ஹலோ சொன்னனா... நான் தான் பேசுறேன்னு சொன்னதும் சிக்னல் கிடைக்காம லைன் கட் ஆகிடுச்சி... சார்"னு சொல்லி இருக்காரு, ராத்திரி விசாரணைக்கு போன நடிகர்.

மொதல்ல காமெடியா சிரிச்ச போலீசு அந்த போன்ல எவ்ளோ நேரம் பேசியிருக்காங்க... எத்தினி நாள் பேசியிருக்காங்கன்னு லிஸ்ட் எடுத்து முன்னால் போட 'பேயறைஞ்ச' மாதிரி ஆகிடுச்சாம் விசாரணைக்கு போனவரோட முகம்...

'வேஷம் போட்டு நல்லவன்னு பேர் எடுக்குறதை விட ... கெட்டவன்னு சொன்னாலும் பரவாயில்லைன்னு நல்லவனா வாழுறது எவ்வளவோ மேல்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க'ன்னு சொல்லிட்டு ஜக்கம்மா கிளம்பிட்டாங்க!

- கோலிவுட் கோடங்கி

English summary
Police has interrogates leading hero cum director in producer absconding case.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil