மானமே போச்சு.. அரசியல் நடிகரின் அலட்சியம்.. வெளியே தலைகாட்ட முடியாமல் தவிக்கும் ரசிகர்கள்

By Staff

சென்னை: இந்த நடிகர் அரசியலுக்கு வந்த பின்னர் அரசியல் விமர்சிகர்களுக்கு ஒரே குஷி தான் என்று கூறும் அளவுக்கு, இந்த அரசியல் நடிகரின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்த நடிகர் திடீரென அரசியலில் குதித்து தனது ரசிகர்களின் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றுவேன் என்று நம்பிக்கையுடன் பேசி வருகிறார். இப்படி இருக்கையில் இந்த நடிகர் தனது தேர்தல் வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் அவர் குறித்த தவறான தகவல்களை தெரிவித்துள்ளதால் அது மிகப் பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்த அரசியல் நடிகர் இதற்கு முன்னர் அவரது சொந்த விஷயங்கள், அரசியல் பேச்சுக்கள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் ஆகியவற்றால் இணையதள வாசிகள் மத்தியில் மட்டுமல்லாமல் மாற்று அரசியல் கட்சியினராலும் அரசியல் விமர்சகர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். இதில் நெட்டிசன்கள் பலரும் அந்த நடிகரையும் அவருக்கு ஆதரவாக பேசும் அவரது ரசிகர்களையும் மனசாட்சியே இல்லாமல் கலாய்த்து வந்துள்ளனர்.

இப்படி இருக்கையில் இந்த நடிகர் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்து இரண்டு தொகுதிகளிலும் நாமினேஷன் தாக்கல் செய்துவிட்டார். இதில் என்ன விஷயம் என்றால் இரண்டு தொகுதிகளிலும் அவர் செய்த நாமினேஷனில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தகவலை குறிப்பிட்டுள்ளார்.

Political Actor Who Give Wrong Informations In His Affidavit - Gossip

தவறான தகவல்கள்: அதாவது அவரது வயதில் வித்தியாசம் அவர் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என்ற தகவல்கள் குறித்து ஒரு வேட்புமனுவில் குற்ற வழக்குகள் இல்லை என்றும் மற்றொரு வேட்புமனுவில் குற்ற வழக்குகள் இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான தகவல்களை மாற்று அரசியல் கட்சியினர் மற்றும் இணையதள வாசிகள் பலரும் இணையத்தில் வேகமாக பகிர்ந்து நடிகரை காட்டமாக விமர்சித்தனர். குறிப்பாக நடிகர் இந்த வேட்பமான தாக்கலை முழுவதுமாக படித்துவிட்டு தான் கையெழுத்துப் போட்டாரா அல்லது வேறு யாரோ தயார் செய்து கொடுத்ததை கையெழுத்து போட்டு அங்கு சென்று சமர்ப்பித்தாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வெளியே தலை காட்ட முடியல: இது மட்டுமல்லாமல் ஒருவேளை இந்த வேட்புமனுவை கடைசி நாளில் தாக்கல் செய்திருந்தால் நடிகரின் வேட்புமனுக்கள் இரண்டுமே தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்காது. அப்படி இருக்கையில் இந்த நடிகர் எதற்காக இவ்வளவு அலட்சியமாக செயல்பட்டார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகர் எது செய்தாலும் அவருக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் பல இடங்களில் குரல் கொடுத்து வந்தனர். ஆனால் இந்த விஷயத்தில் நடிகருக்கு ஆதரவாக என்ன பேசுவது என்றே தெரியாமல் அவரது ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர். ஒரு அரசியல் கட்சியின் தலைவர் தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று மேடைக்கு மேடை முழங்கி கொண்டிருப்பவர் அவரது வேட்புமனுவில் இவ்வளவு அலட்சியமாக செயல்படலாமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X