ரெய்டில் நடிகையுடன் சிக்கிய அரசியல் பிரமுகரின் வாரிசு.. கடைசி நேரத்தில் காப்பாற்றிய அரசியல் புள்ளி!
சென்னை: சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் என்பது சாதாரணமாகிவிட்டது. முன்பெல்லாம் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பேசுவதற்கே பல நடிகைகள் தயங்கினார்கள். ஆனால், இப்போது துணிச்சலான பல நடிகைகள் இதுபற்றி துணிந்து பேசி வருகின்றனர். சினிமாவில் இப்படி ஒரு பிரச்சனை இருக்க, சினிமாவை தாண்டி சில அரசியல் புள்ளிகளும் நடிகைகளுக்கு தொல்லை கொடுப்பதாக பிரபல பத்திரிக்கையாளர் பேட்டி ஒன்றில் தெளிவாக கூறியுள்ளார்.
அதில், அரசியல்வாதிகள் நடிகைகளுடன் தொல்லை கொடுப்பதும், அவர்களுடன் தொடர்பில் இருப்பதும். இப்போது மட்டுமில்லை, ஆண்டு ஆண்டு காலமாகவே சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே இருக்கிறது. அரசியல் ரீதியாகவோ, சினிமா ரீதியாகவோ சில நிகழ்ச்சிகளில் சந்திக்கும் போது அவர்களுடன் நட்பு ஏற்பட்டுவிடும். சில நேரத்தில் நடிகைகளே, அரசியல் பெரும் புள்ளிகளிடம் சென்று ஆதரவு கேட்பார்கள், அடைக்கலம் கேட்பார்கள். சில அரசியல் பிரமுகர்களுக்கு இவர்களின் படத்தை பார்த்து ஆசை வந்துவிடும். அப்படித்தான் சிரிப்புக்கு பெயர் போன ஒரு நடிகை மீது மத்திய அரசியலில் பெரிய பதவியில் இருக்கும் அரசியல்வாதியின் மகனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

அரசியல் வாரிசுக்கு வந்த ஆசை: இதை காதல் என்று சொல்லிவிட முடியாது, அந்த நடிகையின் அழகின் மீது ஆசை வர, இதற்கு என்று சில ஆட்கள் இருப்பார்கள். அவர்களின் வேலையை, நடிகைகளிடம் பேரம் பேசி, இந்த காரில், இந்த இடத்திற்கு வரவேண்டும் என்று சொல்வது தான். வேலை முடிந்ததும், சத்தமே இல்லாமல் மீண்டும் அனுப்பிவைத்துவிடுவார்கள். அரசியல் பிரமுகரின் மகன், இந்த ஆட்களிடம், சிரிப்புக்கு பெயர் போன நடிகையை பற்றி சொல்ல, அவர்கள் அந்த நடிகையிடம் பேசி பெரும் தொகையை கொடுத்து நடிகையை ஓட்டலுக்கு அழைத்து வந்துள்ளனர்.
ரெய்டில் சிக்கிய நடிகை: ஓட்டலில் உல்லாசமாக இருந்த நேரத்தில், அந்த ஓட்டலில் ரெய்டு நடக்க, அதில், சிரிப்புக்கு பெயர் போன நடிகையும், அரசியல் பெரும் புள்ளியின் வாரிசும் கையும் களவுமாக சிக்கி உள்ளனர். இந்த விஷயம், மத்திய அரசியலில் பெரும் பதவியில் இருந்த அந்த அரசியல் பிரமுகரின் காதுக்கு போக,
அவர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துப்போய் உள்ளார். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால், தன்னுடைய அரசியல் வாழ்க்கையும், மகனின் வருங்கால அரசியல் வாழ்க்கையும் வீணாகிவிடும் என பயந்து போய், தமிழகத்தில் ஒரு பெரும் அரசியல் கட்சித் தலைவரிடம் விஷயத்தை சொல்லி இருக்கிறார்.
இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட, தமிழக அரசியல் கட்சி தலைவர்,சம்மந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு நேரடியாக பேசி, என்ன விஷயம் என்பதை விசாரித்துவிட்டு, அந்த அரசியல் புள்ளியின் மகனும், சிரிப்புக்கு பெயர் போன நடிகையும் சேர்த்து நிற்க வைத்து ஒரு போட்டோவை எடுத்துவிட்டு, அவர்களை அனுப்பி வைத்துவிடுங்கள் என கூறியுள்ளார். இதையடுத்து, அவர்கள் சர்ச்சையில் சிக்காமல் வெளியில் வந்துவிட்டனர். பின் நாளில், அரசியல் ரீதியாக ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், அந்த மத்திய அரசியல் பிரமுகரிடம், இந்த போட்டோவை காட்டி மிரட்டுவதற்காக, தமிழக அரசியல் கட்சித் தலைவர் இப்படி ஒரு வேலை செய்தார் என பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











