மாஸ் நடிகரின் வளர்ச்சி.. ஆட்டம் கண்ட அரசியல் பிரபலம்.. எல்லா இடத்துல இருந்தும் செக் வச்சா எப்படி?

By Staff

சென்னை: அந்த அரசியல் பிரபலத்துக்கு ஏகப்பட்ட சவால்கள் மற்றும் நெருக்கடிகள் பல இடங்களில் இருந்து அடுத்தடுத்து குவிந்துக் கொண்டே இருப்பதால் ரொம்பவே அப்செட்டாக உள்ளாராம்.

சமீபத்தில், நடிகையையும் தன்னையும் சேர்த்து வைத்து பேசும் போது கூட நடிகை ரியாக்ட் செய்த அளவுக்கு கூட அந்த அரசியல் பிரபலம் எதுவும் பேசாமல் அமைதி காத்தது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Political personality upset over Popular actor s political growth


அதை விட பெரிய விவகாரத்தில் தலை சிக்கியிருப்பதால் என்ன செய்வதென்றே தெரியாமல் பேசாமல் சினிமாவிலேயே ஜாலியாக இருந்திருக்கலாமோன்னு நினைத்து வருகிறாராம்.

டிரெய்லருன்னு நினைச்சிட்டாங்களா?: மாஸ் நடிகர் சினிமாவில் சாதிக்கும் அளவுக்கு எல்லாம் அரசியலில் களம் கண்டால் நட்டு கழண்டு விடும் என நினைத்துக் கொண்டிருந்த அரசியல் பிரபலத்துக்கு அவருடைய அசுர வளர்ச்சியை பார்த்து ஆடிப்போய் விட்டாராம். கட்சியில் ஆட்களை சேர்க்க நடிகர் பார்த்த வேலையை ஆரம்பத்தில் விளையாட்டாக நினைக்க 50 லட்சம் பேர் அசுரத்தனமாக கட்சியில் சேர்வார்கள் என்று கொஞ்சம் கூட யாருமே நினைத்துப் பார்க்கவில்லை என்கின்றனர். இத்தனை லட்சம் பேரை சேர்க்க பல ஆண்டுகள் போராட வேண்டுமே இவர் எப்படி இதை சாதித்தார் என பலரும் புலம்பிக் கொண்டிருக்கிறார்களாம்.

டாப் நடிகர் ரசிகர்களும்: சினிமாவில் தான் போட்டியும் பொறாமையும் ஆனால், மாஸ் நடிகர் அரசியலுக்கு வந்து விட்ட நிலையில், அவருக்கு பக்க பலமாக டாப் நடிகர் ரசிகர்களும் ஸ்டார் நடிகர் ரசிகர்களும் ஒன்று திரண்டு ஆதரவு அளித்து வருகின்றனர் என்கிற அதிர்ச்சி ரிப்போர்ட்டும் அரசியல் பிரபலத்துக்கு சென்று அடிவயிற்றை கலங்க வைத்து விட்டது என்கின்றனர்.

ஏகப்பட்ட சிக்கல்: ஏற்கனவே வெயிட்டான மேட்டரில் வசமாக சிக்கிக் கொண்டு தவிக்கும் அரசியல் பிரபலம் இந்த நடிகரின் அசுர வளர்ச்சியை எப்படி கன்ட்ரோல் பண்ணுவதென்றே தெரியாமல் திக்குமுக்காடி போய் உள்ளார் என்று கூறுகின்றனர். நடிகரின் வளர்ச்சியை தடுக்க பல வழிகளில் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால், அதையெல்லாம் சமாளிக்க நடிகர் பல்வேறு விஷயங்களை ஆரம்பித்து வைத்து விட்டுத்தான் தைரியமாக களத்தில் குதித்துள்ளார் என்றும் கூறுகின்றனர். என்னவெல்லாம் கூத்துக்கள் நடக்கப் போகிறது என்பதை வெயிட் பண்ணிப்பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X