அந்த மேட்டர்.. சிக்கிய அரசியல்வாதி.. நம்பர் நடிகையின் கணவருக்கு கடைசி நேர தலைவலி.. என்ன ஆச்சு?
சென்னை: ஒல்லி நடிகரின் 2வது படமாக வரவேண்டிய படம் இன்னமும் வெளியாகாமல் இருக்கும் நிலையில், 3வது படம் முந்திக் கொண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தாலும் நிஜமாகவே சந்தோஷமடைய வேண்டிய நம்பர் நடிகையின் கணவர் ரொம்பவே அப்செட்டாக இருக்க காரணமே அந்த அரசியல்வாதிதான் என்கின்றனர்.
படத்தில் முக்கியமான கதாபாத்திரத்துக்கு தெரியாத்தனமாக அந்த அரசியல்வாதியை தேர்வு செய்துவிட்டேனே என இப்போ புலம்பி வருகிறாராம் அந்த இயக்குநர் என கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.

அந்த படம் முழுசா முடிந்து ரெடியாகாமல் இருக்க அரசியல்வாதியின் பங்கும் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், அவரோ பெரிய பிரச்சனையில் வசமாக சிக்கியுள்ள நிலையில், அதனால் படத்துக்கு பாதிப்பு ஏற்படுமோ என பணம் போட்ட நடிகையும் தீவிர ஆலோசனையில் இருக்கிறார் என தகவல்கள் புகையத் தொடங்கியுள்ளன.
ஹாட்ரிக் அடிப்பாரா?: குட்டி ஒல்லி நடிகரின் 2 படங்கள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், தனது 3வது படத்தின் மூலம் ஹாட்ரிக் அடிக்க வேண்டும் என்கிற வெறி நடிகருக்கு நிறையவே இருக்கிறதாம். அதன் காரணமாகவே இயக்குநரின் சில காட்சிகளை மாற்றியமைத்தும் நேரம் எடுத்துக் கொண்டு படத்தை உருவாக்கவும் அவர் முயற்சித்து வருவதாக கூறுகின்றனர்.
அரசியல்வாதியால் சிக்கல்: சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த அந்த பிரபலம் மீண்டும் இயக்குநர் பெரிய சம்பளம் கொடுக்கிறார் என்றதும் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தார். ஆனால், அரசியல் கேமில் அவர் கடந்த சில மாதங்களாக செய்து வரும் அட்ராசிட்டி மற்றும் நடிகையால் அவருக்கு ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல் காரணமாக ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கப்போவதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. இந்நிலையில், அவரால் படத்திற்கு பெரிய பாதிப்பு ஏற்படுமோ என்கிற அச்சம் இயக்குநருக்கும் பணம் போட்ட நடிகைக்கும் வந்திருப்பதாக கூறுகின்றனர்.
வருமா? வராதா?: இயக்குநரை வேண்டாம் என டாப் நடிகர் விரட்டியடித்த பின்னர் ஆரம்பிக்கப்பட்ட படம் இத்தனை ஆண்டுகள் தாமதம் ஆனாலும், தரமாக வந்திருப்பதாகவே கூறுகின்றனர். இந்த படத்தில் நடித்த இயக்குநர்களும் தங்களின் இன்புட்ஸ் கொடுத்து படத்தை மெருகேற்றியிருப்பதாகவும் சொல்கின்றனர். ஆனால், படம் வெளியாவதற்கு பெரிய தடையாக அந்த அரசியல்வாதி பிரபலம் இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன. சீக்கிரமே பிரச்சனைகளை முடித்து வெளியிடும் முயற்சியில் நம்பர் நடிகையின் கணவர் தீயா வேலை செய்து வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











