»   »  ஓ... இந்த ஆண்டு உச்சத்துக்கு தேசிய விருது கிடைக்காததற்கு காரணம் அரசியல்தானா!

ஓ... இந்த ஆண்டு உச்சத்துக்கு தேசிய விருது கிடைக்காததற்கு காரணம் அரசியல்தானா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாஸ் கமர்ஷியலாகவே நடித்து வந்த உச்ச நடிகர் கடந்த ஆண்டு வெளியான படத்தில் எமோஷனலாகவும் நடித்து நல்ல நடிப்பு என்ற பெயரைப் பெற்றார். நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் விருது அறிவிப்பில் அவரது பெயர் இல்லை.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி நடிகரை தங்கள் கட்சிக்கு இழுக்க முயன்றது. ஆனால் நடிகர் பிடிகொடுக்கவில்லை.

Politics behind national award

இடைதேர்தலின்போது அந்தக் கட்சியின் வேட்பாளர் மேலிட உத்தரவின்படி நடிகரை சந்தித்து விட்டு வெளியே வந்து நடிகர் தனக்கு ஆதரவு தரவிருப்பதாகச் சொன்னார். ஆனால் நடிகர் மறுநாளே தன் ஆதரவு யாருக்கும் இல்லை என்று அறிவித்துவிட்டார்.

இப்படி எத்தனை நெருக்கடி கொடுத்தாலும் ஆதரவு தெரிவிக்காத நடிகர் மீது மத்திய மேலிடத்துக்கு வருத்தம். அதனால்தான் கடைசி நேரத்தில் நடிகர் பெயரை பட்டியலில் இருந்து எடுத்து விட்டதாக விருதுக் குழுவில் இருந்த ஒருவர் தனது நெருங்கிய வட்டாரத்தில் பேசியது டெல்லி மீடியாக்களில் வலம் வருகிறது.

நடிகர் அரசியலுக்கு வந்தால் தங்களுக்கு ஆபத்து என்று அதனை தடுக்கும் வேலைகளும் நடக்கிறதாம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Delhi media says that super star actor missed national award due to ruling party's political revenge.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil