போட்டிக்கு நானாக வரலைங்க?.. அவங்கதான் காரணம்.. மாஸ் நடிகருக்கு பெர்சனலாக ஃபோன் செய்த இளம் நடிகர்?

By Staff

சென்னை: 2026ஆம் ஆண்டு பொங்கல் தமிழ் திரைத்துறையில் அனைவராலும் கவனிக்கப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது. ரிலீஸாகும் படங்கள் மீது பெரிய ஹைப் எகிறியிருக்கிறது. மாஸ் நடிகர் என சொல்லப்படும் நடிகரின் படத்தோடு இளம் ஹீரோ ஒருவரின் படமும் போட்டிக்கு வருகிறது. இந்தப் போட்டிக்கு காரணமே அந்த நடிகர்தான் என பலரும் சொன்ன சூழலில்; மாஸ் நடிகருக்கு இளம் ஹீரோ பெர்சனலாக ஃபோன் செய்து தனது நிலைமையை விளக்கினாராம்.

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் என்று புகழப்படும் ஆறெழுத்து நடிகர்; புதிய பயணத்தை தொடங்கியிருக்கிறார். இதன் காரணமாக திரைத்துறைக்கு குட் பை சொல்லவிருக்கிறார். அவர் நடித்திருக்கும் மக்கள் ஹீரோ படம்தான் அவரது கடைசி படம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இந்தப் படத்தின் ரிலீஸை திருவிழா போல் கொண்டாட அவரது ரசிகர்கள் இப்போதிருந்தே ஃபுல் ஃபார்மில் ரெடி ஆகிவருகிறார்கள்.

குறுக்கே இந்த கௌஷிக் வந்தால்?: கடைசி படம் என்பதால் வசூல் வேட்டை நடத்தும்; கோலிவுட்டில் பெஞ்ச் மார்க்காக இப்படம் அமையும் என்றெல்லாம் கனவு கண்டிருந்தார்கள் மாஸ் நடிகருடைய ரசிகர்கள். ஆனால் குறுக்கே இந்த கௌஷிக் வந்தால் என்பது போல் இளம் ஹீரோவின் படமும் போட்டியாக களமிறங்குகிறது. முதலில் மக்கள் ஹீரோ படத்தின் ரிலீஸுக்கு ஐந்து நாட்கள் கழித்தே இளம் ஹீரோவின் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Pongal 2026 Turns Explosive What the Young Hero Told the Superstar Here s the Kollywood Gossip

போட்டியில் யாருக்கு வெற்றி?: ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் மாஸ் ஹீரோவின் படத்துக்கு போட்டியாக களமிறங்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இந்தப் போட்டியில் யார் வெற்றியடைவார் என்ற கேள்விதான் அனைவரிடமும் எழுந்திருக்கிறது. மாஸ் ஹீரோவின் படத்தின் இயக்குநர் தற்போதைய இயக்குநர்களில் முக்கியமானவர். அதேபோல் இளம் ஹீரோ படத்துடைய இயக்குநரும் குறைந்தவர் இல்லை. அநேகமாக இரண்டு படங்களுமே பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை பெற வாய்ப்புகள் இருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது.

சோஷியல் மீடியாவில் மோதல்: ஆனால் இளம் ஹீரோ தங்களுக்கு போட்டியாக வருவார் என்று பெரிய ஹீரோவின் ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. இப்போது போட்டி உறுதியாகிவிட்டதால் இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களுக்கும் இடையே சோஷியல் மீடியாவில் சண்டைகள் வலுக்க் ஆரம்பித்திருக்கின்றன. இது ஒருபக்கம் இருகக் இந்தப் போட்டிக்கு காரணமே இளம் ஹீரோதான்; படத்தின் கதை மீது உச்சக்கட்ட நம்பிக்கை இருப்பதால்; மாஸ் ஹீரோவுடன் போட்டியிட்டு வென்று; பெரிய தலைக்கட்டையே சாய்த்துவிட்டேன் என்பதை காண்பிக்கத்தான் இந்தப் போட்டியை அவர் உருவாக்கியிருப்பதாகவும் பேச்சு ஒன்று ஓடுகிறது.

ஃபோன் செய்த இளம் ஹீரோ: இந்தப் பேச்சை இளம் ஹீரோ சுத்தமாக விரும்பவில்லையாம். தன்னிடம் துப்பாக்கி கொடுத்தவரையே இவர் எதிர்க்கிறாரே என்ற பிம்பத்தையும் உடைக்க மாஸ் ஹீரோவுக்கு பெர்சனலாக ஃபோன் செய்தாராம். அப்போது இந்தப் போட்டிக்கு நானாக வரவில்லை; நமக்கும் மேலே இருப்பவர்கள் என்னை பயன்படுத்தி உங்களை சாய்க்க முடிவெடுத்தார்கள். எவ்வளவோ நான் சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை. இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை நீங்கள் எதுவும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தாராம். மாஸ் ஹீரோவும், இதுதான் நடந்திருக்கும் என நினைத்தேன் என சொல்லி; எனக்கு எந்த பிரச்னையும் இல்லை; நீங்கள் எதையும் அலட்டிக்கொள்ள வேண்டாம் என்று கூலாக பேசி ஃபோனை வைத்தாராம். இதனால் இளம் ஹீரோ செம ஹேப்பியில் இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X