»   »  பூ நடிகைக்கு வரவேற்பு சித்தி நடிகைக்கு கெட் அவுட் ஏன் தெரியுமா?

பூ நடிகைக்கு வரவேற்பு சித்தி நடிகைக்கு கெட் அவுட் ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூரிய சேனலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வருபவர் ரயில் நடிகை. சித்தியாக கூவி... இப்போது ராணியாக ராத்திரி நேரத்தில் இல்லத்தரசிகளை சந்தித்து வருகிறார். வேறு எந்த சேனலுக்கும் இதுவரை நிகழ்ச்சியோ சீரியலோ எடுத்து கொடுத்ததில்லை.

ஆளுங்கட்சிக்கு கணவர் போன போது கூட சேனலை மாற்றவில்லை சித்தி. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலைச் சேனலில் உச்ச நடிகரின் படத்தை வைத்து திடீரென டாக் ஷோ நடத்தினார். அதோடு சீரியல், டாக்ஷோ என்று பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம்.

இதனால் கடுப்பான சூரிய சேனல், இப்போது பூ நடிகையை வரவேற்ற கையோடு, சரித்திர சீரியல், டாக் ஷோ நடத்தச் சொல்லியிருக்கிறதாம். இதன் மூலம் சித்தியின் இருபது ஆண்டுகால ராஜ்ஜியம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சித்தி அந்த சேனலில் மதியம் ஒன்று இரவில் ஒன்று வார இறுதியில் ஒன்று என மூன்று ஸ்லாட்களை கைவசம் வைத்துள்ளார். பூவும் சித்தியும் நண்பர்களாக இருந்தாலும் சூரிய சேனலின் திட்டத்தால் முட்டிக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளார்களாம்.

English summary
Here is the background story of big channel secret plan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil