»   »  பூஜாவை புரட்டியெடுத்த புதுச் சரக்கு!

பூஜாவை புரட்டியெடுத்த புதுச் சரக்கு!

Subscribe to Oneindia Tamil

பூஜாவைப் பத்தி கொஞ்ச நாளா சத்தமே காணோமே என்று விசாரித்துப் பார்த்தால் "படா செய்தி ஒன்று காதுக்கு கிடைத்தது.

சிங்களத்து தாய்க்கும், இந்தியத் தந்தைக்கும் பிறந்தவரான பூஜா, இப்போது 2 சிங்களப் படங்களில் நடித்து வருகிறாராம்.

இந்தப் படங்களின் ஷூட்டிங் தற்போது இலங்கையில் நடந்து வருகிறது. உற்சாகப் பானப் பிரியையான பூஜா, சமீபத்தில் நடந்தஷூட்டிங்கின்போது ஒரு சரக்கை வாங்கி உள்ளே தள்ளியுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து வந்த புதுச் சரக்கு என்று அதை பூஜாவுக்குக் கொடுத்துள்ளார்கள். சரக்கும் நன்றாகவே இருக்கவே கூடசோடா, வாட்டர் எதையும் கலக்காமல் அப்படியே அடித்துள்ளார் பூஜா.

அளவுக்கு மிஞ்சினால் எதுவும் நஞ்சு தானே. இது தெரியாமல் சும்மா கிடைத்த சரக்கை உள்ளே தள்ளிக் கொண்டே இருந்தார்.சிறிது நேரத்தில் அந்த இடத்திலேயே வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார் பூஜா.

உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடியுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சைக்குப் பிறகுதான் ஒரு வழியாக கண்விழித்தாராம் பூஜா.

சரக்கு ஓவராக உள்ளே போனதால், அவரது மூளையை பாதிக்கும் அளவுக்கு நிலைமை சென்று விட்டதாம். சரியான சமயத்தில்கொண்டு வரப்பட்டதால் பூஜா தப்பித்தாராம்.

பல மணி நேரத்திற்கு பிறகு தெளிந்த பூஜா, இனிமேல் சரக்கு இருக்கும் திசைக்கே செல்லமாட்டேன் என்று தன் குடும்பத்தினருக்குசத்தியம் செய்து கொடுத்தாராம்.

பூஜாவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil