வந்தது 6 பேர்... கடைசி வரை இருந்தது 4 பேர்... வெள்ளிக்கிழமை படத்தின் பாக்ஸ் ஆபீஸ் 'கலவரம்' இது!
இந்த வாரம் வெளியான நான்கு படங்களில் ஒன்று அது. ஓரளவு எதிர்ப்பார்க்கப்பட்ட படமும் கூட. கொஞ்சம் நல்ல அரங்குகளும் கிடைத்திருந்தன.
தென்மாவட்டங்களில் விநியோகப் பகுதியான புதுக்கோட்டையில் ஒரு அரங்கில் படம் வெளியானது. முதல் நாள் 11 மணிக் காட்சி. படம் பார்க்க மொத்தம் எத்தனைப் பேர் வந்திருப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ஜஸ்ட் 6 பேர்!!

என்னடா நம்ம தியேட்டருக்கு வந்த சோதனை என நொந்துபோன தியேட்டர் நிர்வாகம், வேறு வழியின்றி ஷோவைப் போட்டது. இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஷோ தொடங்கியபோது, வந்திருந்தவர்களில் இருவர் கிளம்பிவிட்டனர்.
நான்கு பேர்தான் இருந்தார்கள். அவர்களும் ஜோடிகளாய் வந்தவர்கள். 1 மணி நேரம் ஏசி, படம் திரையிட ஆகும் மின்சார செலவையாவது தடுக்கலாமே என நினைத்து, "நீங்களும் கிளம்பிடுங்க. வேணும்னா காசை திருப்பித் தந்துடறோம்," என்றார்களாம்.
"கூட்டமிருக்காதுன்னு தெரிஞ்சிதான் வந்திருக்கோம். இப்ப பாதில போகச் சொன்னா எப்படி... படத்தைப்போடுவியா?" என்று எகிற வேற வழியின்றி ஷோ போட்டிருக்கிறார்கள்.
நேற்றுமுழுக்க இன்டஸ்ட்ரியில் இதுதான் பரபரப்பு செய்தி.
என்ன படம் என்கிறீர்களா? எதுக்கு... வேணாம்! ஆனா, கோலிவுட் நிலைமை இப்போதைக்கு ரெம்பவே மோசம்தான்!


Click it and Unblock the Notifications











