இது என்னய்யா லீடர் நடிகருக்கு வந்த சோதனை?

By Siva

சென்னை: இது என்னடா லீடர் நடிகருக்கு இப்படி ஒரு சோதனை ஏற்பட்டுள்ளது.

பெரும் பட்ஜெட்டில் லீடர் நடிகர் நடித்துள்ள படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் அந்த படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் ஒருவர் தெரிவித்தார்.

லீடரும், இயக்குனரும் சேர்ந்த முந்தைய படத்திற்கும் இதே புகார் எழுந்து அடங்கியது.

கதை திருட்டு

கதை திருட்டு

லீடர் பெரிய நடிகர் என்பதால் இப்படித் தான் யாராவது வருவார்கள் என்று கதை திருட்டு புகாரை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் தான் அந்த உதவி இயக்குனர் லீடரின் படக் கதை தன்னுடையது என்பதை நிரூபித்துள்ளார். அவரின் கதையில் 95 சதவீதத்தை திருடி படம் எடுத்துள்ளார் லீடரின் இயக்குனர்.

லீடர்

லீடர்

ஒரு பெரிய நடிகரை வைத்து படம் எடுக்கும் இயக்குனர் இப்படியா கதையை திருடுவது என்று விமர்சனம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இம்முறை கதை திருட்டு விவகாரத்தில் தப்பிக்க முடியாத அளவுக்கு இயக்குனர் சிக்கியுள்ளதால் படத்திற்கு பிரச்சனை வந்துவிடுமோ என்று லீடரின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கதை

கதை

அரசியல் சார்ந்த படம் வெளியான பிறகு லீடர் நடிகர் இளம் இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளார். அந்த இளம் இயக்குனர் பல படங்களில் இருந்து கதையை சுட்டு ஒரு கலக்கு கலக்கி தன் கதை என்று சொல்லி படம் எடுப்பதற்கு பெயர் போனவர். கதையை சுட்டு படம் எடுக்கும் பார்ட்டிகளிடமாக மாட்டிக் கொண்டுள்ளார் லீடர்.

படங்கள்

படங்கள்

படங்களை தேர்வு செய்யும்போது சொந்தமாக கதை எழுதும் இயக்குனர்களை லீடர் நடிகர் தேர்வு செய்தால் நல்லது. தொடர்ந்து திருட்டுக் கதைகளிலாக நடித்துக் கொண்டிருக்கிறார் பாவம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X