தம்பி தலையிலேயே கடைசியாக கை வைத்த பிரைட் நடிகர்.. அந்த இயக்குநர் மட்டும் தான் காப்பாற்றணுமாம்!
சென்னை: பிரைட் நடிகர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், பாக்ஸ் ஆபிஸில் தனக்கும் ஒரு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ய அந்த யூனிவர்ஸ் இயக்குநருடன் கைகோர்க்க துடித்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக பிரம்மாண்ட படத்தில் அந்த விலங்கு இயக்குநருடன் நடித்துள்ள நிலையிலும், அந்த படத்தின் மீது கூட நடிகருக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை என்கிற ஷாக்கிங் தகவல் கசிந்துள்ளன.

அதன் காரணமாக அவசர அவசரமாக தனது தம்பியின் தலையிலேயே கை வைத்து விட்டார் பிரைட் நடிகர் என்கிற பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
பார்ட் 2 படத்துக்கு வேட்டு: தம்பி நடிகர் அந்த யூனிவர்ஸ் இயக்குநர் இயக்கத்தில் நடித்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், பல முன்னணி நடிகர்களும் அந்த ஒரு இயக்குநரை சுற்றியே ஈ போல மொய்த்து வருகின்றனர். பெரிய நடிகர்கள் அடுத்தடுத்து இயக்குநரிடம் கெஞ்சி கூத்தாடி கர்ச்சிப் போட்டு வரும் நிலையில், தம்பி நடிகரின் பார்ட் 2 படம் பல ஆண்டுகளாக இன்னமும் ஆரம்பிக்கப்படாமலே உள்ளது.
சமீபத்தில், உச்ச நடிகரும் அந்த இயக்குநரை கரெக்ட் செய்த காண்டில் தான் தம்பி படத்தின் தயாரிப்பாளரே கடுப்பாகி அப்படியொரு ட்வீட்டை போட்டு சர்ச்சையில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தம்பி தலையில் கை வைத்த அண்ணன்: அந்த இயக்குநரும் ஒரு பெரிய நடிகர் படத்தை முடித்து விட்டு தனக்கு பிடித்த படமான அந்த தம்பி நடிகரின் படத்தை இயக்கலாம் என நினைக்க, லைன் கட்டி அவருக்கு ஆஃபர் குவிந்துக் கொண்டே இருக்க, இயக்குநர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்து வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க, பாக்ஸ் ஆபிஸ் மோகம் அண்ணன் நடிகரையும் ஆட்டி படைக்க, தம்பி நடிகரின் தலையில் கை வைத்து தன்னுடைய படத்தை அந்த இயக்குநர் முதலில் பண்ணட்டும் அதன் பின்னர் உன் படத்தை பண்ணட்டும் என டீல் பேசி கவிழ்த்து விட்டாராம். பாவம் அண்ணன் பிழைத்துப் போகட்டும் என தம்பி நடிகரும் தாராளமாக தனது படத்தை பொறுமையாக பண்ணிக் கொள்ளலாம் என விட்டு விட்டதாக பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
அந்த படத்தின் மீது நம்பிக்கை இல்லை: இதற்கு காரணமே பிரைட் நடிகரின் அந்த பிரம்மாண்ட படத்தின் மீது அவருக்கே நம்பிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது. அந்த மிருக இயக்குநர் பட்ஜெட்டை பெரிதாக இழுத்து விட்டாலும், அவுட் பெரிதாக ஈர்க்கும் அளவுக்கு இல்லை என ஃபீல் பண்ணதால் தான் பாக்ஸ் ஆபிஸை டார்கெட் செய்ய அந்த இயக்குநரின் உதவியை தற்போது நடிகர் நாடியிருப்பதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











