மாஸ் நடிகரை போலவே மசாலா நடிகருக்கும் குடைச்சல்.. அரசியலில் அடியெடுத்து வைக்க பிளான் போடுறாராம்?
சென்னை: சினிமாவில் நடனத் திறமையை வைத்துக் கொண்டு எப்படியாவது நடிகராக மாறிவிட வேண்டும் என சிவனேன்னு வேலை பார்த்துக் கொண்டு கோடிகளில் புரண்டு வரும் ஹீரோக்களுக்கு தேவையில்லாமல் அரசியல் அழுத்தம் கொடுத்து அவர்களையும் அரசியலுக்குள் இழுத்து வருகின்றனர் என கோலிவுட்டில் புலம்பியதை போலவே தற்போது பக்கத்து ஸ்டேட்டிலும் புலம்பல் ஜாஸ்தியாக உள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.
மாஸ் நடிகரின் படங்கள் ஒவ்வொரு முறையும் வெளியாகும் போதெல்லாம் அவரது வளர்ச்சி பிடிக்காமல் அவருக்கு எந்த அரசாக இருந்தாலும் பயங்கர குடைச்சல் கொடுத்து சினிமா நிகழ்ச்சிகளை நடத்த விடாமலும் படங்கள் சரியான நேரத்தில் வெளியாகவிடாமல் தடுத்தும் டென்ஷன் ஆக்கி வந்த நிலையில், தான் அவர் சினிமாவை விட்டு விலகி அரசியலுக்குச் செல்லவே முடிவெடுத்ததாக கூறுகின்றனர்.

இந்நிலையில், அந்த மசாலா நடிகரையும் டார்கெட் செய்து அரசியல் வலைக்குள் தற்போது தள்ள பார்த்து விட்டதாகவும் இதற்கு மேல் சம்பாதிக்க என்ன இருக்கிறது, நாமும் அரசியல் கட்சியை ஆரம்பித்து விடலாமா? என்கிற ஆலோசனையில் தீவிரமாக மசாலா நடிகர் இருப்பதாக பேச்சுகள் புகையத் தொடங்கி உள்ளன.
பழிவாங்கும் நடவடிக்கை: மசாலா நடிகருக்கு நாடு முழுவதும் திடீரென செல்வாக்கு அதிகரித்த நிலையில், அதிகாரத்தில் இருக்கும் சிலருக்கு அவரது சினிமா வளர்ச்சி சுத்தமாக பிடிக்கவில்லையாம். அதன் காரணமாகவே அவரை எப்போ உள்ளே தள்ளலாம் என பிளான் போட்டுக் கொண்டிருந்த நிலையில், வசமாக ஒரு மேட்டர் சிக்கியதும் நடிகரை எந்தளவுக்கு பழிவாங்க முடியுமோ அந்த அளவுக்கு பழிவாங்கி விட்டாராம் அந்த அரசியல் பிரபலம் என்கின்றனர்.
அசிங்கமா போச்சு குமாரு: இதுவரை கெத்தாக மசாலா நடிகர் சுற்றிக் கொண்டிருந்த நிலையில், அவருக்கு நடந்த அவமானத்தை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை என்கின்றனர். படத்திலேயே அவமானப்படுத்தும் நபர்களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்க எந்த எல்லைக்கும் நடிகர் செல்வது போல காட்சிகள் இடம்பெற்று வந்த நிலையில், நிஜத்தில் அவரை மானபங்கம் செய்வது போன்ற செயல் நடைபெற்ற நிலையில், அரசியலில் அடியெடுத்து வைக்க அதிரடியாக முடிவு செய்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
ஏற்கனவே சினிமா பவர்: மசாலா நடிகரின் போட்டி நடிகர் ஏற்கனவே இப்படி அரசியலில் குதித்து தான் பெரிய பதவியிலேயே தற்போது இருக்கிறார். இந்த நடிகரும் அரசியலில் குதிக்க முடிவு செய்து விட்டால் தேவையில்லாமல் சீண்டிய நபருக்குத்தான் சங்கடம் ஏற்படும் என்கின்றனர். மேலும், நடிகரை தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தால் அவர் நிச்சயம் அரசியல் பக்கம் தான் திரும்புவார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











