கத்தரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகணும்.. அந்த ஹீரோவும் 2ம் திருமணத்துக்கு ரெடி?

By Staff

சென்னை: பான் இந்தியா நடிகராக அசத்தி வரும் அந்த பிரபல ஹீரோவும் சீக்கிரமே பாப்புலர் ஹீரோயின் உடன் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. பேபி நடிகை சீக்ரெட்டாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே நிச்சயதார்த்தத்தை முடித்தும் யாருக்கும் எந்தவொரு தகவலையும் கசியவிடாமல் ரகசியம் காத்து வந்தார்.

இந்நிலையில், நடிகையின் திருமண அறிவிப்பு வெளியானதும் அடுத்தடுத்து ரகசியமாக காதல் வாழ்க்கை நடத்தி வரும் சில பிரபலங்களும் சீக்கிரமே இதே போல நாமும் திருமணத்தை செய்துக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்திருப்பதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.

Popular Actor also ready to do second marriage soon
Photo Credit:

குறிப்பாக அந்த பிரபல ஹீரோ தான் கூடிய சீக்கிரமே கையில் இருக்கும் சில படங்களை முடித்து விட்டு தனது ரகசிய காதலியை 2வது திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என்கின்றனர்.

நடிகைகளுடன் கிசுகிசு: சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், மனைவிக்கு நடிகர் மீது சந்தேகம் ஏற்பட இருவருக்கும் இடையே வெடித்த மோதல் காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிய முடிவு செய்தனர். ஆனால், அந்த திடீர் பிரபல நடிகையின் வரவு தான் நடிகருக்கும் அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து நடக்கவே காரணம் என்றும் நடிகர் நடிகையின் மீது காதலில் விழுந்த செய்தி எப்படியோ மனைவியின் காதுகளுக்கு கசிந்த நிலையில், தான் அவர் நடிகரை பிரிந்தார் என்கின்றனர்.

விரைவில் 2வது திருமணம்: தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் விவாகரத்து செய்வதும், 2வது திருமணம் செய்வதும் என ஒரே ஒரு வாழ்க்கையை தங்களுக்கு பிடித்தது போல இஷ்டம் போல வாழ முடிவெடுத்து விட்டனர். அந்த காலத்தில் இருந்தே நடிகர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்வது வாடிக்கையான நிலையில், இன்றும் அதை பல நடிகர்கள் ஃபாலோ செய்கின்றனர். அதற்கு முக்கிய காரணமே அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு தான் என்கின்றனர்.

நடிகைக்கு கோபம்: அந்த நடிகருடன் நடிகை காதல் என கிசுகிசு வந்த நிலையில், வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருந்த நடிகை இன்னொரு விளையாட்டு பிரபலத்துடன் கிசுகிசு கிளம்பிய உடனே ரியாக்ட் செய்து பூனைக்குட்டியை வெளியே விட்டுவிட்டார் எனக் கூறுகின்றனர். கூடிய சீக்கிரமே இருவருக்கும் இடையே ரகசிய திருமணம் அரங்கேறும் என கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. கத்தரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்து தானே ஆகணும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X