புரமோஷனுக்கு போனாலும் ஒல்லி நடிகருக்கு கடன் தொல்லை டார்ச்சர் தானாம்.. பேச்செல்லாம் அப்படியே இருக்கே?

சென்னை: கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் சிலர் நிம்மதியாகவோ, சந்தோஷமாகவோ வாழ முடியாத நிலையில் இருக்க காரணமே அகல கால் வைப்பது தான் என்கின்றனர். விழுந்து விழுந்து கும்பிட்டாலும் ஒட்டுற மண் தான் உடம்பில் ஒட்டும் என ஊர் பக்கத்தில் பழமொழி சொல்வது போலத்தான் ஒல்லி நடிகரின் நிலைமையும் சமீப காலமாக டோட்டலாக மாறிவிட்டது என கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.

நடிகரின் மீது மனைவிக்கே நம்பிக்கை இல்லாத நிலையில், தான் ஈகோ கிளாஷ் ஏற்பட்டு பிரியும் நிலையே உருவானது என்றும் கடன் தொல்லையால் நடிகர் தவித்து வரக் காரணமே அவருடைய பேராசை தான் என்கின்றனர்.

Popular Actor always worried about his big debt in recent times

சாதாரண டிவி நடிகர்கள் மற்றும் நடிகைகள் கூட சம்பாதித்துக்கும் போதுமான பணத்தை வைத்துக் கொண்டு நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டு பல இடங்களுக்கு ஜாலியாக சுற்றுலா செய்து வாழ்க்கையை கொண்டாடி வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே ஓய்வே எடுக்க முடியாத அளவுக்கு ஒல்லி நடிகர் கடுமையாக வேலை பார்க்க காரணமே அவருடைய கடன் தொல்லை தான் என பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

ஆரம்பத்தில் ஓவர் ஜாலி: சினிமாவில் ஹீரோவான புதிதில் நடிகரை கையிலேயே பிடிக்க முடியாத அளவுக்கு ஓவர் ஜாலியாக வாழ்க்கையை தனக்கு தோன்றியபடி எல்லாம் வாழ்ந்துக் கொண்டிருந்த நடிகருக்கு திடீரென தற்போது அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்ட நிலையில், அதிக பொறுப்பு வந்துவிட்டது என்றும் கூடிய சீக்கிரமே இந்த சுமையை தூக்கி தூர போட வேண்டும் என்றால் கஷ்டப்பட்டு உழைத்தே ஆக வேண்டும் என நடிகர் போராடி வருகிறாராம்.

வளர்த்து விட்டவர் எல்லாம்: ஒல்லி நடிகர் வளர்த்து விட்ட பிரபலங்கள் எல்லாம் ஓஹோன்னு நடிகரையே மிஞ்சி உச்சத்துக்கு சென்றுவிட்ட நிலையில், எப்படியாவது அவர்களை ஓவர்டேக் செய்து, தன்னுடைய இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என உழைத்து வருகிறாராம். ஆனால், அவருக்கு மனதளவில் பெரிய அச்சமும் உள்ளதால் தான் தொடர்ந்து அடக்கி வாசித்து வருகிறார் என்கின்றனர்.

கடனால் வந்த கஷ்டம்: நடிகரின் வாழ்க்கையில் ஏகப்பட்ட மேடு பள்ளங்கள் வர முக்கிய காரணமே அவர் சில தேவையற்ற முதலீடுகளை செய்தது தான் என்றும் தற்போது அளவுக்கு அதிகமான கடன் தொல்லையால் தவித்து வரும் அவர், தனது வீடு குறித்தும் கடன் சுமை குறித்துமே புரமோஷனுக்கு செல்லும் இடங்களில் கூட பேசி வருகிறார் என்கின்றனர். மேலும், இன்னமும் 10 ஆண்டுகள் தொடர்ந்து ரெஸ்ட் எடுக்காமல் உழைக்கும் அளவுக்கும் ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி வரும் நிலையில், உடல்நிலையையும் அவர் கவனித்துக் கொள்ள வேண்டும் என சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X