டி நடிகருக்கும் டே நடிகைக்கும் ஃபயர் பத்திக்கிச்சா?.. எல்லாத்துக்கும் காரணம் அந்த விஷயம் தானாம்?
சென்னை: டி நடிகருக்கும் டே நடிகைக்கும் இடையே திடீரென ஏற்பட்ட உறவு குறித்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் சோஷியல் மீடியாவில் கிளம்பியுள்ளன. பொய்யாக இருந்தால் முதல் முறையே கிள்ளி எறிந்திருப்பார்களே, இத்தனை நாட்கள் ஏன் அப்படியே சைலன்ட்டாக உள்ளனர் என்று கிண்டி பார்த்தால் இவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கெமிஸ்ட்ரி உண்மை தான் என நெருங்கிய வட்டாரங்கல் தகவல் தெரிவித்துள்ளன.
நடிகர் இயல்பாகவே அந்த விஷயத்தில் வீக் தான் என்றும் ஏற்கனவே மனைவியுடன் நடிக்கும் போதே அந்த படத்தின் ஹீரோயினுடன் வட மாநிலத்தில் நடிகர் அடித்த லூட்டி பலருக்கும் தெரிந்து தான் மனைவிக்கு ரொம்பவே அசிங்கமாகி விட்டது என்றனர்.

தொடர்ந்து பல நடிகைகளுடன் கணவர் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் தான் இதற்கு மேல் அவருடன் அட்ஜெஸ்ட் பண்ணிக் கொண்டு வாழ முடியாது என மனைவி டைவர்ஸ் பெற்றார் என்கின்றனர்.
பெயர் கெட்டுப்போச்சு: என்னதான் நல்லா நடிச்சாலும் பாஸ் நடிகர் போல டி நடிகருக்கும் பெயர் டோட்டல் டேமேஜ் ஆகிவிட்டது என்றும் அவர் நடிக்கும் படங்கள் இனிமேல் பெரிதாக ஓடுவது என்பது சந்தேகம் தான் என்கின்றனர். எல்லாத்துக்கும் அந்த நம்பர் நடிகை பார்த்த குழி பறிக்கும் வேலை தான் காரணம் என்று கூறுகின்றனர்.
லீக் ஆக காரணம்: தற்போது நடிகருக்கும் நடிகைக்கும் ஏற்பட்டுள்ள புதிய உறவை அம்பலப்படுத்தியதும் அந்த சண்டைக்கோழி நடிகையின் கைங்கரியம் தான் என்றும் தொடர்ந்து நடிகரின் இமேஜை டேமேஜ் செய்வதற்காகவே அவரது தீவிர ரசிகர்கள் சிலர் செயல்பட்டு வருவதாக கூறுகின்றனர். நடிகர் இந்த விஷயத்தில் தொக்காக மாட்டவும் நடிகை விரித்த வலை தான் காரணம் என்கின்றனர்.
எதைப்பத்தியும் கவலை இல்லை: ஆனால், நடிகர் இதை போல பல பிரச்சனைகளை சந்தித்து விட்ட நிலையில், தற்போது எதை பற்றியும் அவருக்கு கவலை இல்லை என்கின்றனர். மேலும், விஷயம் வெளியே தெரிந்தாலும், அப்படியே அமைதியாக இருந்தால் இன்னொரு பிரச்சனை வந்ததும் நம்மை மறந்து விடுவார்கள் என்பதில் நடிகர் செம தெளிவாக இருப்பதால் தான் இந்த பிரச்சனை குறித்து எந்த மூச்சும் விடாமல் இருப்பதாக கூறுகின்றனர்.
நம்பர் ஒன் ஆக்குகிறேன்: மேலும், நம்பர் நடிகையின் இடத்தை கோலிவுட்டில் டே நடிகைக்கு கொடுக்கவும் தன்னால் முடியும் என்றும் கைவசம் பல படங்கள் உள்ள நிலையில், சரியான படத்தில் தன்னுடன் நடிகையை அறிமுகப்படுத்தி கோலிவுட்டின் டாப் நடிகையாகவும் மாற்றவும் திட்டம் வைத்திருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.


Click it and Unblock the Notifications











