போட்டா போட்டியால் சீரழியும் பிரபலங்கள்.. அந்த நடிகருக்கும் நடிகைக்கும் நடக்கும் சோஷியல் வார்?
சென்னை: நம்பர் நடிகர் பற்றியும் ஒல்லி நடிகர் பற்றியும் அடுத்தடுத்து ஏகப்பட்ட வதந்திகள் கிளப்ப காரணமே பிரபலங்கள் இருவரது போட்டா போட்டி தான் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. நடிகரை எப்படியாவது அசிங்கப்படுத்த வேண்டும் என நடிகை தரப்பும் நடிகையை சும்மா விடக் கூடாது, முடிந்த வரை கேவலப்படுத்துங்க என நடிகரின் தரப்பில் இருந்தும் சோஷியல் வாரே நடப்பதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.
சினிமாவில் நடிகர்களுக்கு பெரிதாக நட்பு வட்டாரமே இருக்காது என்றும் ஒருவரது வளர்ச்சியை பார்த்து இன்னொருவர் பொறாமைத்தான் படுவார்கள் என்று சொல்வார்கள். அந்த காலத்திலேயே என்னுடன் நடிக்கும் நடிகைகள், தனக்கு நிகரான நடிகருடன் நடிக்கக் கூடாது என்றெல்லாம் கட்டளைகளை போட்ட கதைகள் எல்லாம் ஏராளம் உண்டு.

ஆரம்பத்தில் நண்பர்களாக சுற்றித் திரிபவர்கள், ஒரு கட்டத்தில் பிரச்னை பெரிதாக வெடிக்க, பரம எதிரிகளாக மாறிய கதைகளையும் இந்த சினிமா உலகில் பார்த்திருக்கிறோம். தற்போதும் அப்படியொரு ரியல் சினிமாவை ரசிகர்கள் சமீப காலமாக கண்டு இப்படியெல்லாம் சண்டை போடுவார்களா என்று ஷாக் ஆகியுள்ளனர்.
நடிகரை அசிங்கப்படுத்திய நடிகை: மறைமுகமாக நடிகர் நடிகைக்கு வைத்த செக்குகளை பார்த்து கடுப்பான நடிகை சாமார்த்தியமாக திரை மறைவாகவே தனது பஞ்சாயத்தை தீர்த்துக் கொள்ளாமல், ரசிகர்களுக்கு அந்த நடிகரின் இரட்டை வேஷம் தெரியட்டும் என வெளிப்படையாகவே அசிங்கப்படுத்த பல பிரபல நடிகைகளும் நடிகைக்கு ஆதரவு குரல் கொடுத்தது நடிகருக்கு பெண்கள் மத்தியிலும் தாய் மார்கள் மத்தியிலும் இருந்த நல்ல பெயர் மொத்தமாக கெட்டுப் போய்விட்டதாக கூறுகின்றனர்.
ஐடி விங் பார்க்கும் வேலை: நடிகை தன்னை டோட்டல் டேமேஜ் செய்துவிட்டார் என்றும் தன்னுடைய நல்ல படம் கூட இங்கே ஓடவில்லையே என்கிற கடுப்பு நடிகருக்கு இருப்பதை புரிந்துக் கொண்ட அவரது ஐடி விங் நடிகை குறித்த சில வதந்திகளை சோஷியல் மீடியாவில் உலாவ விட்டு பெரிய பிரச்னையை கிளப்பியதாக கூறுகின்றனர்.
போட்டா போட்டி: நடிகருக்கும் இயக்குநருக்கும் இடையே பிரச்னை என கிளப்பி விட்டதும் அந்த நடிகையின் ஐடி விங் பார்த்த வேலை தான் என்றும் இருவரது போட்டா போட்டி காரணமாக அவர்கள் தான் சிரமப்படுகின்றனர் என்றும் மற்ற நடிகர்களும் இடையே புகுந்து இருவரது பகையை தங்கள் ஐடி டீமை வைத்துக் கொண்டும் ஊதிப் பெரிதாக்குவதாகவும் அதிச்சி தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











