பிரைட் நடிகருக்கும் காமெடி டைரக்டருக்கும் முட்டிக்கிச்சா?.. மாஸ் நடிகர் புகழாரம் தான் காரணமா?
சென்னை: பொதுவாகவே ஒரு படம் வெற்றிப் பெற்றால் டைரக்டருக்குத் தான் பரிசுகள் கிடைக்கும். அவருக்கு அடுத்து தான் அந்த படத்தில் சிறப்பாக பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பரிசுகள் கொடுக்கப்படும்.
ஆனால், பிரைட் நடிகர் தொடர்ந்து காமெடி டைரக்டரை ஒதுக்கி வருவதாகவே தெரிகிறது என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. டைரக்டரை அடிக்கவும் பிரைட் நடிகர் ஐடி விங் தான் பரபாப்பாக வேலை பார்த்து வருகிறது என்றும் நடிகரின் அமைதிக்கும் அதுதான் காரணம் என்றும் கூறுகின்றனர்.

நடிகர் பேசும் போது கூட இந்த படத்தின் வெற்றிக்கு டைரக்டர் காரணம் இல்லை என்பதை சொல்லாமல் சொல்ல, தனது உதவியாளர் சொன்ன மேட்டர் தான் படம் பிளாக்பஸ்டர் ஆக காரணம் என பேசியிருந்ததும் டிகோட் செய்யப்பட்டு வருகிறது.
ஏமாற்றினாரா டைரக்டர்?: பிரைட் நடிகருக்கான கதை என்று அவருக்கு காதில் பூ சுற்றி ஏமாற்றிவிட்டாரா காமெடி டைரக்டர் என்கிற கேள்வி தான் தற்போது சினிமா வட்டாரத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. நடிகரும் இயக்குநர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்பதை உணர்ந்து தான் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவாய்டு செய்து வருகிறார் என்றும் எப்போதுமே வெற்றி தரும் டைரக்டர்களின் ஓவர் பேச்சு நடிகருக்கு புடிக்காமல் போகத்தான் அவர் அதன் பின்னர் அவர்களுடன் இணைந்து பணியாற்றாமல் ஃப்ளாப் ரூட்டுக்கு போக காரணம் என்றும் கூறுகின்றனர்.
நடிகருக்கு மறைமுக அட்டாக்: அந்த வாய்த்துடுக்கான டைரக்டரும் சும்மா இருக்கவில்லை. தொடர்ந்து பிரைட் நடிகருக்கு மறைமுக அட்டாக் கொடுக்கிறேன் பாருங்க, நான் எவ்வளவு அறிவு ஜீவி என நடிகருக்கு எதிராக செய்யும் அனைத்து வேலைகளும் அவருக்குத்தான் பேக் ஃபயர் ஆகி வருகிறது என்கின்றனர். நடிகரின் ரசிகர்கள் படையும் டைரக்டரை தொடர்ந்து துவைத்து எடுக்க காரணமும் நடிகர் கொடுத்த சிக்னல் தான் என பகீர் கிளப்புகின்றனர்.
ஓவர் ஆட்டம்: தன்னால் தான் வெற்றி என டைரக்டர் சந்தோஷ மிகுதியில் பண்ணும் எந்தவொரு காரியமும் ஈகோ கிளாஷால் நடிகருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறுகின்றனர். இவர்களின் பிரச்னைக்கு முக்கிய காரணமே இதன் பின்னணியில் மாஸ் நடிகர் உள்ளது தான் என்கின்றனர். இது எங்கே போய் முடியப் போகுதோ தெரியவில்லை என்று கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications