கடைசி வரை கம்முன்னு இருந்தா ஜம்முன்னு படத்தை ரிலீஸ் பண்ணலாம்.. கையில கிடைச்சும் சைலன்ட் ஏன்?
சென்னை: மாஸ் நடிகர் படத்துக்கு இன்னும் வரவேண்டியது வரலையேன்னு தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில், வர வேண்டியது வந்தாலும், அதை பப்ளிகுட்டி பண்ண வேண்டாம் என புரொமோஷன் வேலைகளில் படு பிசியாக மாறியுள்ளாராம் தமாஸ் நடிகர்.
தியேட்டர் ஓனர்களில் இருந்து அனைத்து தரப்பும் தமாஸ் நடிகரின் படத்தை இந்த முறை மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற்ற வேண்டும் என்கிற உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடக்க ஆரம்பித்துள்ளது என்றும் மாஸ் நடிகர் படத்தை சரியான நேரத்தில் ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கவும் அனைத்து வேலைகளையும் மறைமுக நட்பு மூலம் செய்து வருகிறது என்றும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே என மாஸ் நடிகரும் தனக்கு வரவேண்டிய சம்பளம் வந்துவிட்டது. இனிமேல், எல்லாம் தயாரிப்பாளர் பிரச்சனை என தனது அடுத்த கட்ட வேலைகளில் மட்டும் தனது டீமை கவனம் செலுத்த சொல்லிவிட்டார் என்றும் திடுக்கிட வைக்கின்றனர்.
யாருக்கு ஆப்பு: மாஸ் நடிகருக்கு ஆப்பு வைக்கிறேன் பாருங்க என அவரை நம்பி பெரிய பணத்தை போட்ட தயாரிப்பு நிறுவனத்துக்குத்தான் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த படத்தில் நடிக்கவே விருப்பம் இல்லை என்றாலும், கமிட் செய்த காரணத்துக்காகத்தான் மாஸ் நடிகர் நடித்துக் கொடுத்துள்ளார் என்றும் கூறுகின்றனர். பெரிய பிசினஸ் மேனான அந்த தயாரிப்பாளர் தான் தற்போது அனைத்து பிரச்சனைகளையும் சரிகட்டி படத்தை வெளியிட போராடிக் கொண்டிருக்கிறார் என்கின்றனர்.

கிடைக்க வேண்டியது கிடைத்தும்: மாஸ் நடிகர் படத்துக்குத்தான் கிடைக்க வேண்டியது இன்னமும் கிடைக்காமல் டிக்கெட் புக்கிங்கை தொடங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார் என்றும் எல்லாம் கிடைத்த நிலையிலும், அதுபற்றி மூச்சே விடாமல் புரோமோஷன் பணிகளில் மட்டுமே தமாஸ் நடிகர் ஈடுபட்டு வருவதற்கு பின்னாடி மிகப்பெரிய காரணம் உள்ளது எனக் கூறுகின்றனர்.
கடைசி வரை குடைச்சல்: ஏற்கனவே இதுபோன்ற குடைச்சல்களை கொடுத்த நிலையில் தான் தனது டிராக்கையே நடிகர் மாற்றினார் என்றும் ஆனால், கடைசி வரை குடைச்சல் கொடுக்கவும் அவருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் பெரிய நஷ்டத்தை உண்டாக்கும் முயற்சியில் சிலர் முட்டுக்கட்டைகளை போட்டு வரும் நிலையில், அவையெல்லாம் கூடிய சீக்கிரமே அவர்களுக்கே சிக்கலை உருவாக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











